செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
459887a1-810c-4197-a7cd-4434fa08976e
-

சட்டவிரோதமாக மின்சைக்கிள்

ஓட்டியவருக்குச் சிறை

எஸ், ேதவானந்த், 33, சட்டவிரோத மாக நடைபாதையில் மின் சைக்கிள் ஓட்டிச்சென்றபோது 74 வயது மூதாட்டியின் குடை சைக்கிளில் சிக்கியதால் மூதாட்டி கீழே விழுந்து தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் டெலிவரு உணவு விநியோகிப்பு நிறுவனத்தில் தேவானந்த் பணியாற்றி வந்தார். மூதாட்டிக்கு காயம் விளைவித்ததற்காகவும் நடைபாதையில் சட்ட விரோதமாக மின்-சைக்கிள் ஓட்டியதற்காகவும் அவருக்கு ேநற்று நான்கு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வாகன உரிமைச் சான்றிதழ்

வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) கட்­ட­ணங்­கள்

நேற்­றைய ஏலத்­தில் சிறிய வாகனங்களைத் தவிர எல்லா வகை வாக­னங்­க­ளுக்­கும் அதி­க­ரித்­தது. இவற்­றில் பெரிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் ஆக அதி­க­மாக, 4.1 விழுக்­காடு அதி­க­ரித்து $$95,889 ஆனது. 1,600சிசி வரை­யி­லான சிறிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் 4.1% குறைந்து $68,001 என முடி­வ­டைந்­தது. பொதுப் பிரி­வுக்­கான கட்­ட­ணம் 5.3 % அதி­க­ரித்து $95,901 ஆனது. மோட்­டார் சைக்கிள் களுக்கான கட்­ட­ணம் சற்று அதி­க­ரித்து $9,490 ஆனது. வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான கட்­ட­ணம் 1.2% அதி­க­ரித்து $51,501 ஆனது.