புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலைகள்

புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலைகள்

1 mins read
5d21d132-dd34-4d56-aa1b-afbe2b9fad02
கட்­ட­ணக் கழிவு­ க­ளுக்குப் பிறகும் பெட்ரோல் விலைகள்சிங்கப்பூரில் இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­க­மாக உள்­ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எண்­ணெய் விலை­கள் மார்ச் மாதத்தை விட 15% குறை­வாக இருந்­தா­லும் கூட, பெட்­ரோல் விலை­கள் மற்­றொரு புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளன. எஸ்­பிசி, சினோ­பெக் நிலை­யங்­களில் பெட்­ரோல் விலை லிட்­ட­ருக்கு $3க்கும், கால்டெக்ஸ், ஷெல் நிலை­யங்­களில் லிட்­ட­ருக்கு $3.05க்கும் விற்­கப்­படு­கிறது.

இது மார்ச் மாதத்­தில் இருந்த உச்­சத்­தை­விட 15% அதி­கம் என்று சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின் எரி­பொ­ருள் விலை கண்­கா­ணிப்­புத் தள­மான ஃபியூல் காக்கி தெரி­வித்­தது.

92-ஆக்­டேன் ரக பெட்­ரோல் இப்­போது லிட்­ட­ருக்கு எஸ்­பிசி நிலை­யத்­தில் $3.13க்கு, கால்­டெக்ஸ் நிலை­யத்­தில் $3.20க்கு விற்­கப்­ப­டு­கிறது. இது மார்ச் மாதத்­தைக் காட்­டி­லும் 7% அதி­கம்.

95-ஆக்­டேன் ரக பெட்­ரோல் லிட்­ட­ருக்கு எஸ்­பிசி நிலை­யத்­தில் $3.16க்கும், கால்­டெக்ஸ், ஷெல் நிலை­யங்­களில் $3.25க்கும் விற்­கப்­ப­டு­கிறது.

98-ஆக்­டேன் ரக பெட்­ரோல் லிட்­ட­ருக்கு எஸ்­பிசி, சினோ­பெக் நிலை­யங்­களில் $3.64க்கும் ஷெல் நிலை­யத்­தில் $3.74க்கும் விற்­கப்­படு­கிறது. இது மார்ச் மாத உச்­சத்­தை­விட 0.5% அதி­கம்.

சினோ­பெக் நிலை­யத்­தில் 98- ஆக்­டேன் ரக பெட்­ரோல் லிட்­ட­ருக்கு $3.77க்கும் $3.96க்கும் இடையே விற்­கப்­ப­டு­கிறது. இது­வும் மார்ச் மாதத்தை­விட 0.5% அதி­கம்.

கட்­ட­ணக் கழி­வு­க­ளுக்­குப் பிற­கும் பெட்­ரோல் விலை­கள் சிங்­கப்­பூ­ரில் இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­க­மாக உள்­ளன.

அண்­மைய அதி­க­ரிப்­பு­டன், வாக­ன­மோட்­டி­கள் கட்­ட­ணக் கழி­வு­க­ளுக்­குப் பிறகு பிர­ப­ல­மான 95-ஆக்­டேன் எரி­பொ­ரு­ளுக்கு ஜன­வரி மாதத்தை விட 22% அதிக விலை செலுத்­து­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.