எட்டு இடங்களில் மின்னியல் சாலை கட்டண உயர்வு

எட்டு இடங்களில் மின்னியல் சாலை கட்டண உயர்வு

1 mins read
5e4b7bc2-d611-4a31-aade-165fcdee18bc
-

தீவின் எட்டு இடங்­களில் போக்­கு­வ­ரத்­துக்கு உகந்த வேக வரம்பு குறைந்­தி­ருப்­ப­தால், இம்­மா­தம் 30ஆம் தேதி­யில் இருந்து அந்­தப் பகு­தி­களில் 19 நேரங்­களில் படிப்­ப­டி­யாக மின்­னி­யல் சாலைக் கட்­ட­ணம் உயர்த்­தப்­படும்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், ஏப்­ரல், மே மாதங்களில் மேற்­கொண்ட போக்குவரத்து நிலைமை கண்­கா­ணிப்பில், மார்ச் 29ஆம் தேதி­யில் இருந்து வேலை­யி­டத் தளர்வுகளால் விரை­வுச் சாலை­க­ளின் பல்­வேறு இடங்­களில் போக்கு வரத்­தின் அளவு அதி­க­ரித்து இருப்­பது தெரிய வந்­துள்­ளது என்று ஆணை­யம் கூறி­யது.

ஜூன் மாதம் பள்ளி விடு­முறை முடிந்த பிறகு, ஜூன் 27 முதல், மூன்று இடங்­களில் ஆறு கால­கட்­டங்­களில் மின்­னி­யல் சாலைக் கட்­டண உயர்வு தொடங்­கும்.

"போக்குவரத்து வேகம், நெரிசலின் அளவை தொடர்ந்து கண்காணித்து, கட்டண விகிதங்கள் மேலும் சரிசெய்யப்பட வேண்டுமா என மதிப்பிடப்படும்," என்று ஆணையம் கூறியது.