உடற்குறை உள்ளவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் புதிய மையம்

உடற்குறை உள்ளவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் புதிய மையம்

2 mins read
a19c64c0-d693-4ec8-83ee-77f00a102c9f
எனேபலிங் வில்லேஜ்ஜில் திருவாட்டி டிஜி கெரோல் ஏன்னுடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உடற்­குறை உள்­ள­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் மற்­றும் முத­லா­ளி­க­ளுக்­கும் கூடு­தல் ஆத­ரவு வழங்­கும் வகை­யில் புதிய மையம் ஒன்றை 'எஸ்ஜி எனே­பல்' திறந்து வைத்­துள்­ளது.

இந்த மையத்­தின் மூலம் பயிற்சி வகுப்­பு­க­ளை­யும் இதர சேவை­ களையும் மேலும் எளி­தாக நாட முடி­யும்.

புதி­தா­கத் திறந்து வைக்­கப்­பட்டு உள்ள இந்த 'எனே­ப­லிங் அகா­டமி', 'எஸ்ஜி எனே­பல்' மற்­றும் 36 பங்­காளி அமைப்­பு­க­ளின் முயற்­சி­களை ஒருங்­கி­ணைத்­தி­டும்.

வேலை நிய­ம­னத்­திற்கு உடற்­குறை உள்­ள­வர்­கள் தகு­தி­பெ­று­வ­தற்­கான வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தரும் வகை­யில் மின்­னி­லக்க விளம்­ப­ரம், கணக்­கி­யல் போன்ற துறை­கள் தொடர்­பான பயிற்சி வகுப்­பு­கள் இல­வ­ச­மா­க­வும் சலு­கைக் கட்­ட­ணத்­தி­லும் வழங்­கப்­படும்.

நேர நிர்­வா­கம், சமை­யல் போன்ற அன்­றாட வாழ்க்­கைக்­குத் தேவை­யான திறன்­களை உடற்­குறை உள்­ள­வர்­கள் கற்­றுக்­கொள்­ள­வும் பயிற்சி வகுப்­பு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

புதிய மையத்தை நேற்று லெங்கோ பாரு­வில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா திறந்­து­வைத்­தார்.

"வேலைக்கு அமர்த்­தக்­கூ­டிய தகு­தி­யைப் பெற­வும் அதைத் தக்க வைத்­துக்­கொள்­ள­வும் தேவை­யான திறன்­களை உடற்­குறை உள்­ள­வர்­கள் பெற வேண்­டும். அதற்­கான பயிற்சி வாய்ப்­பு­களை நாம் உரு­வாக்­கித் தர­வேண்­டும்.

"அப்­போ­து­தான் உடற்­குறை உள்­ள­வர்­கள் தங்­க­ளின் ஒவ்­வொரு வாழ்க்­கைக் கட்­டத்­தி­லும் தேவை­யான கற்­றல் வாய்ப்­பு­களை நாட எளி­தாக இருக்­கும். முத­லா­ளி­கள் மற்­றும் பங்­காளி அமைப்­பு­களும் தங்­க­ளின் திட்­டங்­களை ஒருங்­கிணைப்­ப­தும் எளி­தாகி­வி­டும்," என்று அவர் கூறி­னார்.

புதிய மையத்­தின் இணை­யத்­தளம் வழி உடற்­குறை உள்­ள­வர்­களின் பரா­ம­ரிப்­பா­ளர்­களும் அவர்­களின் முத­லா­ளி­களும் தகுந்த பயிற்சி வகுப்­பு­க­ளைத் தேட­லாம்.