சிங்கப்பூர் இஸ்லாமிய சமூகத்தின் நலன் குறித்து முஃப்தி

சிங்கப்பூர் இஸ்லாமிய சமூகத்தின் நலன் குறித்து முஃப்தி

1 mins read
95fe2a7e-a59b-4020-bad1-38ee9bccb6d1
-

சமய ரீதி­யான அதன் சொந்த அடை­யா­ளத்தை சிங்­கப்­பூ­ரின் இஸ்­லா­மிய சமூ­கம் உரு­வாக்­கிக் கொள்ள வேண்­டும் என்­பதை கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழல் உணர்த்­தி­யுள்­ள­தாக முஃப்தி நஸி­ரு­தீன் முகம்­மது நசிர் தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூர் சமய ஆசி­ரி­யர்­களின் தலை­மைத்­து­வத்­தி­லும் இஸ்­லா­மிய சமூ­கத்­தி­னர் நம்­பிக்கை கொள்ள வேண்­டும் என்­றார் அவர். கொள்­ளை­நோய் தாக்­கி­யதை அடுத்து முதன்­மு­த­லாக நடத்­தப்­பட்ட வரு­டாந்­திர நோன்­புப் பெரு­நாள் ஒன்­று­கூ­டல் நிகழ்ச்­சி­யில் டாக்­டர் நஸி­ரு­தீன் இவ்­வாறு கூறி­யி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் இஸ்­லா­மிய சமூ­கத்தின் நலன் காக்­கப்­ப­டு­வ­தைச் சமய ஆசி­ரி­யர்­களே உறு­தி­செய்ய வேண்­டும் என்று அவர் நினை­வு­றுத்­தி­னார்.

கொள்­ளை­நோய் தொடங்­கி­ய­போது நிபு­ணர்­க­ளு­டன் சம­யத் தலை­வர்­கள் இணைந்து செயல்­பட வேண்­டி­யி­ருந்­த­தா­க­வும் புதிய தீர்­வு­க­ளைக் கண்­ட­றிய வேண்­டி­யி­ருந்­த­தா­க­வும் அவர் சுட்­டி­னார்.