சரக்கு விநியோகச் செயல்பாட்டுக்கு ஆளில்லா வானூர்தி சாத்தியம்

சரக்கு விநியோகச் செயல்பாட்டுக்கு ஆளில்லா வானூர்தி சாத்தியம்

1 mins read
9b4cdc45-3e6c-4a8e-b71d-e5cce27f0842
-

சிங்­கப்­பூ­ருக்­கும் அருகே உள்ள கப்­பல்­க­ளுக்­கும் இடையே ஆளில்லா வானூர்தி வழி­யாக சரக்கு விநி­யோ­கம் செய்­யும் மைய­மாக எதிர்­கா­லத்­தில் ஜூரோங் துறை­மு­கம் உரு­வெ­டுக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

ஜூரோங் துறை­மு­க­மும் 'ஸ்கை­பார்ட்ஸ்' நிறு­வ­ன­மும் இது தொடர்­பான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் ஒன்­றில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. இதன்­கீழ் சரக்கு விநி­யோ­கச் செயல்­பா­டு­க­ளுக்­கும் உள்­கட்­ட­மைப்­புப் பணி­க­ளுக்­கும் ஆளில்லா வானூர்­தி­யைப் பயன்­படுத்­தும் சாத்­தி­யம் ஆரா­யப்­படும்.

தற்போதைய துறைமுகச் செயல்பாடுகளில் ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படும்.