பல பில்லியன் வெள்ளி மதிப்பிலான கணினிச்சில்லு ஆலை சிங்கப்பூரில் கட்டப்படலாம்

பல பில்லியன் வெள்ளி மதிப்பிலான கணினிச்சில்லு ஆலை சிங்கப்பூரில் கட்டப்படலாம்

1 mins read
9d806dfa-7fa1-4629-89d9-080e95dbe1cf
-

அனைத்­து­லக அள­வில் கணி­னிச்­சில்­லுக்­குத் தட்­டுப்­பாடு நிலவி வரும் நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் தைவான் கணி­னிச்­சில்லு தயா­ரிக்­கும் நிறு­வ­னம் (டிஎஸ்­எம்சி) புதி­தாக பல பில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான ஆலை ஒன்­றைக் கட்­டும் திட்­டத்­தில் இருப்­ப­தாக வால் ஸ்தி­ரீட் ஜெர்­னல் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­து­டன் இது தொடர்­பில் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­வ­தா­கக் கூறப்­பட்­டா­லும் இன்­னும் உறு­தி­யான முடி­வே­தும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று அறி­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் வால் ஸ்திரீட் ஜெர்­னல் வெளி­யிட்ட அறிக்­கை­யின்­படி ஆலை கட்­டும் திட்­டத்­திற்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கம் உத­வ­லாம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும் இது குறித்து கழ­கத்­து­டன் தொடர்­பு­கொண்­ட­போது திட்­டங்­கள் பற்றி நிறு­வ­னங்­க­ளு­டன் ஆலோ­சிப்­பது தொடர்­பான விவ­ரங்­க­ளைக் கழ­கம் வெளி­யி­டாது என்று பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

எந்த ஒரு சாத்­தி­ய­மான திட்­டத்­தை­யும் உடனே நிரா­க­ரித்­து­விட முடி­யாது என்­றும் தற்­போ­தைய நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் ஆலை ஒன்­றைக் கட்­டு­வது தொடர்­பில் உறு­தி­யான திட்­டம் ஏதும் நிறு­வனத்­திற்கு இல்லை என்­றும் 'டிஎஸ்­எம்சி' குறிப்­பிட்­டுள்­ளது.

உல­கி­லேயே ஆக அதி­க­மான கணி­னிச்­சில்­லு­க­ளைத் தயா­ரிக்­கும் நிறு­வ­ன­மாக 'டிஎஸ்­எம்சி' விளங்கு­கிறது. நிறு­வ­னம் அதன் வரு­வாயின் கால்­ப­கு­தியை 'ஆப்­பிள்' நிறு­வ­னத்­தின் மூலம் ஈட்­டு­கிறது.

விநி­யோ­கத் தொடர் பிரச்­சி­னை­கள், தேசிய பாது­காப்பு குறித்த கவ­லை­கள் போன்­ற­வற்­றுக்கு இடையே அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஜப்­பான், சீனா போன்ற பெரும் பொரு­ளி­யல் நாடு­கள் தங்­கள் நாடு­க­ளி­லேயே கணி­னிச்­சில்லு தயா­ரிப்­ப­தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக பில்­லி­யன் கணக்­கில் சலுகை­கள் வழங்­கு­கின்­றன.

இந்­நி­லை­யில் 'டிஎஸ்­எம்சி' அதன் விரி­வாக்­கத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறது.