$1.3 மி. மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

$1.3 மி. மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
058ce276-07cd-4d42-8794-7d265e6976e0
சுமார் 18,000கிலோபோதைப்பொருள்பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. படம்: மத்திய போதைப் பொருள்ஒழிப்புப் பிரிவு -

கிட்­டத்­தட்ட $1.3 மில்­லி­யன் மதிப்­பி­லான போதைப்­பொ­ருளை உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­தாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று மலே­சிய ஆட­வர்­க­ளை­யும் சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­துள்­ள­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வும் குடி­நுழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­ய­மும் நேற்று இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

மலே­சி­யா­வில் பதிவு செய்­யப்­பட்ட கார் ஒன்­றின் வழி­யாக 28 வயது மலே­சிய ஆட­வர் ஒரு­வர் சிங்­கப்­பூ­ருக்­குள் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி வழி­யாக புதன்­கி­ழமை மாலை நுழைய முயற்சி செய்­த­போது, கைது செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

காரின் பின்­ப­கு­தி­யைச் சோத­னை­யிட்­ட­தில் கிட்­டத்­தட்ட 18 கிலோ போதைப்­பொ­ருள் சிக்­கி­யது.

அதை­ய­டுத்து பிடோக் நார்த் ஸ்தி­ரீட் 1ல் மற்ற இரண்டு சந்­தேக நபர்­கள் நேற்று முன்­தி­னம் காலை கைது செய்­யப்­பட்­ட­னர்.

போதைப்­பொ­ருள் அவர்­க­ளின் கைக­ளுக்­குச் செல்­வ­தாக இருந்­த­தெ­னச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருள், சுமார் 8,500 போதைப்­புழங்­கி­க­ளுக்கு ஒரு வார காலத்­திற்கு உட்­கொள்­வ­தற்­குப் போது­மா­னது என்று கூறப்­பட்­டது.

விசாரணை தொடர்கிறது.