இணைய வர்த்தகத் தளங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என்று கூறிக்கொண்டு ஏமாற்றிய மோசடிப் பேர்வழிகளிடம் குறைந்தது 66 பேர் சுமார் $466,000ஐ இழந்துள்ளனர். இவ்வாண்டு ஜனவரி முதல் பதிவான எண்ணிக்கை இது என்று கூறப்படுகிறது. இணைய வர்த்தகத் தளங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்கு தொடர்பில் மோசடி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. தங்களின் கடன் அட்டையிலும் பற்று அட்டையிலும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதை அறிந்த பின்னரே வாடிக்கையாளர்கள் தாங்கள் மோசடிக்கு ஆளாகி உள்ளதை உணர்ந்தனர். மற்றொரு மோசடிச் சம்பவத்தில் போலி அடையாளத்தைப் பயன்படுத்திய 26 வயது ஆடவர் ஒருவர், பல பெண்களைக் காதல் வலையில் சிக்க வைத்து $31,000க்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கிடைத்த புகார்களைக் கொண்டு பிடோக் காவல் துறைப் பிரிவினர், ஆடவரைக் கைது செய்துள்ளனர். அண்மையில் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இணைய வர்த்தக மோசடிச் சம்பவங்களில் $466,000 இழப்பு
அண்மைய காணொளிகள்





















அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!