குடியிருப்பாளர்களுக்கு இலவசப் பரிசோதனை

புளோக் 2 ஜாலான் புக்கிட் மேராவில் ஏழு பேருக்கு காசநோய் பாதிப்பு

புளோக் 2 ஜாலான் புக்­கிட் மேரா­வில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­களை­யும் அங்­குள்ள கடைக்­கா­ரர்­களை­யும் காச­நோய் பரி­சோ­தனைக்குச் செல்­லு­மாறு சுகா­தார அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இந்­தப் பரி­சோ­த­னை­கள் இல­வ­ச­மாக நடத்­தப்­படும் என்று அமைச்சு நேற்று கூறி­யது. வரும் வெள்­ளிக்­கி­ழமை (மே 27) முதல் அடுத்த செவ்­வாய்க்­கி­ழமை (மே 31) வரை பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி, மார்ச் மாதங்­க­ளுக்கு இடை­யில் ஏழு பேரி­டம் காச­நோய் கண்­ட­றி­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இந்­தப் பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

அந்த எழு­வ­ரும் அந்த புளோக்­கில் ஏழு வெவ்­வேறு வீடு­களில் வசிப்­ப­தாக அமைச்சு சொன்­னது.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் வச­திக்­காக, நட­மா­டும் பரி­சோ­த­னைக் குழுக்­கள் அவர்­க­ளது வீடு­க­ளுக்கே சென்று பரி­சோ­தனை நடத்­தும்.

அந்த புளோக்­கில் உள்ள கடை­களில் வேலை செய்­வோர், புளோக் 3 ஜாலான் புக்­கிட் மேரா­வில் உள்ள வசிப்­போர்க் குழு நிலை­யத்­தில் அமைக்­கப்­படும் பரி­சோ­த­னைக் கூடத்­திற்­குச் செல்­ல­லாம்.

2020ஆம் ஆண்டு அக்­டோ­ப­ரில் இருந்து புளோக் 2 ஜாலான் புக்கிட் மேரா­வில் வேலை செய்து அல்­லது வசித்து வந்­தோரை ஜூன் மாதத்­தி­லி­ருந்து சுகா­தார அமைச்சு தொலைபே­சி­யில் தொடர்­பு­கொள்ளும். மோல்­மின் சாலை­யில் உள்ள காச­நோய்க் கட்­டுப்­பாட்­டுப் பிரி­வில் அவர்­க­ளுக்­குப் பரி­சோ­தனை செய்­யப்­படும்.

2020 அக்­டோ­ப­ரில் இருந்து அந்த புளோக்­கில் வசித்து வந்த முன்­னாள் குடி­யி­ருப்­பா­ளர்­கள், பரி­சோ­தனை செய்­து­கொள்ள விரும்­பி­னால் 6258 4430 எனும் எண்­ணில் காச­நோய்க் கட்­டுப்­பாட்­டுப் பிரி­வைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.

காச­நோ­யால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­வர்­க­ளி­ட­மி­ருந்து அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இல்­லா­த­வர்­க­ளுக்கு காச­நோய் பர­வும் அபா­யம் மிக­வும் குறைவு என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

சம்­பந்­தப்­பட்ட அந்த புளோக்­கிற்­கும் அதைச் சுற்­றி­யுள்ள பகுதி­களுக்கும் அவ்­வப்­போது சென்­று­வருவோருக்குப் பரி­சோ­தனை தேவைப்­ப­டாது என்­றும் அமைச்சு சொன்­னது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!