அவசரநிலைப் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த புதிய திட்டம்

அவ­சர மருத்­துவ சிசிச்சை தேவைப்படும் ஒரு­வர் மருத்­து­வ­மனைக்­குச் செல்­வ­தற்கு முன்பு அவ­ருக்கு அளிக்­கப்­படும் பரா­ம­ரிப்­பின் தரத்தை மேம்­ப­டுத்த புதிய திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

பக்­க­வா­தம், இத­யத்­து­டிப்பு நின்று­போ­வது போன்ற அவ­சர நிலையை எதிர்நோக்குவோர் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­வ­தற்கு முன்பு அவர்­க­ளுக்கு அளிக்­கப்­படும் முதற்­கட்ட மருத்­துவ உதவி முக்கி­ய­மா­ன­தா­கும். மருத்­துவ அவ­ச­ர­நிலை பல நேரங்­களில் வீட்­டிலோ வேலை­யிடத்­திலோ ஏற்­ப­டு­வ­தால், உயிர்­க­ளைக் காப்பதில் பெரிய வித்­தி­யா­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தோடு, நோயா­ளி­க­ளின் மருத்­துவ நிலை மேம்­படு­வ­தை­யும் இத்திட்டம் உறு­தி­செய்­யும். தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லேயே முத­ன்முறையாக இடம்பெறும் இந்த மூன்­றாண்­டுத் திட்­டத்தை சிங்­ஹெல்த் குழு­ம­மும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் நேற்று தொடங்கி வைத்­தன.

இந்­தோ­னீ­சியா, மலே­சியா, பிலிப்­பீன்ஸ், தாய்­லாந்து, வியட்­னாம் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த 250 பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு இத்­திட்­டத்­தில் பயிற்சி அளிக்­கப்­படும்.

நேற்று தொடங்கி ஐந்து நாள்­களுக்கு நீடிக்­கும் இத்­திட்­டம், இணை­யத்­தி­லும் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யி­லும் நடத்­தப்­படும். மேலும் மூன்று நாள் பயிற்சி ஒவ்வொரு பங்­கா­ளித்­துவ நாட்­டி­லும் நடத்­தப்­படும்.

தேசிய பேரி­டர் மேலாண்மை அதி­கா­ரி­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், மருத்­துவ ஊர்தி ஊழி­யர்­கள், சமூக அமைப்­புத் தலை­வர்­கள் உள்­ளிட்­டோர் இந்­தப் பங்­கேற்­பா­ளர்­களில் அடங்­கு­வர்.

அவர்­களில் ஏறக்­கு­றைய 30 பேருக்­குக் கூடு­தல் பயிற்சி அளிக்­கப்­படும். சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை­யில் இத்­திட்­டத்தை நேற்று தொடங்­கி­வைத்­தார் சுகா­தார, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன்.

“பயற்­சிக்கு அப்­பாற்­பட்டு, பங்­கா­ளித்­துவ நாடு­க­ளுக்கு இடையே சிறந்த நடை­மு­றை­க­ளைப் பகிர்­வதோடு அவற்­றுக்கு இடை­யில் கூட்டு முயற்­சி­யை­யும் இத்­திட்­டம் ஊக்­கு­விக்­கும்,” என்­றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!