சிங்கப்பூரில் இதுவரை புதிதாக எவருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. என்றாலும், அந்நோயைக் கண்டறிவதிலும் அதை தன்னிடம் தெரியப்படுத்த விழிப்புடன் இருக்குமாறு இங்குள்ள மருத்துவர்கள் அனைவரிடமும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவரத்தை தான் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப் போவதாகவும் அமைச்சு கூறியது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த அமைச்சு, நைஜீரியாவில் இருந்து இங்கு வந்த ஒருவரிடம் 2019 மே 8ஆம் தேதி குரங்கம்மை கண்டறியப்பட்டதைத் தவிர்த்து, நேற்று முன்தின நிலவரப்படி, புதிதாக வேறு எவரிடமும் அது கண்டறியப்படவில்லை என்றது.

