ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு பாராட்டுக் கடிதம்

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு பாராட்டுக் கடிதம்

1 mins read
470e0da0-423d-4820-9a9b-55fd9df39781
-

பிர­த­மர் லீ சியன் லூங், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் புதிய பிர­த­ம­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கும் திரு ஆண்­டனி அல்­ப­னி­சிற்கு பாராட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லி­யத் தேர்­த­லில் தொழிற்­கட்சி வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து திரு லீ நேற்று தமது பாராட்­டுக் கடி­தத்தை அனுப்­பி­னார்.

பிர­த­மர் தமது கடி­தத்­தில், சிங்­கப்­பூ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­விற்­கும் இடை­யி­லான உற­வு­க­ளைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­து­வது குறித்­துத் திரு அல்­ப­னி­சு­டன் இணைந்து பணி­யாற்ற விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் நீண்­ட­கால உற­வு­க­ளு­டன் விரி­வான உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­து­வத்­துக்­கான அம்­சங்­களில் வலு­வான ஒத்­து­ழைப்­பும் நில­வு­வ­தைத் திரு லீ சுட்­டி­னார்.

பசு­மைப் பொரு­ளி­யல் போன்ற புதிய துறை­க­ளி­லும் இரு தரப்­பும் ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­தி­யி­ருப்­ப­தைத் தமது கடி­தத்­தில் குறிப்­பிட்ட பிர­த­மர், வரு­டாந்­தர சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லி­யத் தலை­வர்­கள் சந்­திப்பை ஒட்டி ஆஸ்­தி­ரே­லி­யப் பய­ணம் மேற்­கொள்­வதை எதிர்­நோக்­கு­வ­தா­க­வும் கூறி­னார்.

சந்­திப்­பில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வது குறித்­துக் கலந்­து­ரை­யா­ட­வும், வட்­டார, உல­க­ளா­விய விவ­கா­ரங்­கள் குறித்­துக் கருத்­துப் பரி­மா­றிக்­கொள்­ள­வும் திரு லீ விருப்­பம் தெரி­வித்­தார். ஆஸ்­தி­ரே­லி­யா­வின் புதிய பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னி­சிற்கு நல்ல உடல்­ந­லத்­து­டன் அவ­ரது முயற்­சி­கள் அனைத்திலும் வெற்றி கிட்­ட­வும் பிர­த­மர் லீ வாழ்த்து தெரி­வித்­தார்.