பள்ளி விடுமுறையில் பிள்ளைகளைக் கவரும் புதிய நிகழ்ச்சிகள்

பள்ளி விடு­மு­றைக் காலத்தை முன்­னிட்டு 'யுனி­வெர்­சல் ஸ்டூ­டி­யோஸ் சிங்­கப்­பூர்' பிள்­ளை­க­ளுக்­கான சிறப்பு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

'மினி­யன்ஸ் 2' திரைப்­ப­டம் ஜூன் 30ஆம் தேதி­தான் வெளி­யி­டப்­படும். ஆனால் அதற்கு முன்பே அதில் அறி­மு­க­மா­கும் புதிய 'ஓட்டோ' கதா­பாத்­தி­ரத்­தைச் சந்­திக்­க­வும், அத­னு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்­ள­வும் நினைப்­ப­வர்­கள் மே 26ஆம் தேதி­யி­லி­ருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கும் சிறப்பு நிகழ்ச்­சிக்­குச் செல்­ல­லாம்.

நீர் விளை­யாட்­டு­களில் ஆர்­வம்­கொண்ட பிள்­ளை­க­ளுக்­காக செந்­தோ­சா­வின் ஓலோ கடற்­க­ரை­யில் மூன்று நாள் சிறப்பு விளை­யாட்டு நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஜூன் 13, 14, 15ஆம் தேதி­களில் இடம்­பெ­றும் 'ஃபன் இன் த சன்' நீர் விளை­யாட்டு நிகழ்ச்­சி­யில் ஏழு முதல் 12 வய­து வரையிலான பிள்­ளை­கள் கலந்­து­கொள்­ள­லாம்.

'கேட்ஸ் ஆஃப் த வேர்ல்ட் பர்­ஸார்' நிகழ்ச்­சி­யின் ஓர் அங்­க­மாக, அறச்­செ­ய­லுக்­காக கைவி­னைப் பொருள் செய்­யக் கற்­றுத்­த­ரும் பயி­ல­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மே 28, 29ஆம் தேதி­களில் நடை­பெ­றும் பயி­ல­ரங்­கில் 14 வய­துக்கு மேற்­பட்ட பிள்­ளை­கள் பங்­கு­பெ­ற­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!