காவல்துறை அதிகாரிகளுக்கான பலப் பிரயோக உத்திப் பயிற்சிகள்

சிங்­கப்­பூ­ரில் கடந்த பத்து ஆண்­டு­களில் நான்கு சம்­ப­வங்­களில் காவல்­துறை அதி­கா­ரி­கள் துப்­பாக்­கிச்­சூடு நடத்த நேரிட்­டது; அவற்­றில் இரண்டு இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் நடந்­தவை.

பல்­வேறு பலப் பிர­யோக உத்­தி­க­ளைத் திறம்­ப­டப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பில் காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு அளிக்­கப்­படும் பயிற்சி குறித்து செய்­தி­யா­ளர்­கள் தெரிந்து­கொள்­ளும் வகை­யில் பயி­ல­ரங்கு ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கடந்த வியா­ழக்­கி­ழமை நடந்த பயி­ல­ரங்­கில், அதி­கா­ரி­கள் பயிற்­சித் தள­பத்­தி­யத்­தைச் சேர்ந்த காவல்­து­றைக் கண்­கா­ணிப்­பா­ளர் டோ பெய் லியான் உரை­யாற்­றி­னார்.

பலத்­தைப் பயன்­ப­டுத்த வேண்­டிய சூழ­லில் அதி­கா­ரி­கள் பொது­வான சில அம்­சங்­களில் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்­றார் அவர்.

அச்­சு­றுத்­து­ப­வர் எந்த அளவு மிரட்­ட­லாக விளங்­கு­கி­றார், பொது­மக்­க­ளின் பாது­காப்பு, சக அதி­கா­ரி­க­ளின் பாது­காப்பு இவற்­று­டன் அச்­சு­றுத்­து­ப­வ­ரின் பாது­காப்­பை­யும் கருத்­தில்­கொண்டே எந்த அளவு பலத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று முடி­வெ­டுக்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.

கைது செய்­யும்­போதோ உயி­ருக்கோ உடைமைக்கோ சேதம் ஏற்­படும் என்ற நிலை­யிலோ அதி­கா­ரி­கள் தேவைப்­பட்­டால் மட்டுமே பலப் பிர­யோ­கம் செய்­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­பந்­தப்­பட்ட அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் தீங்கு நேரா­மல் தடுப்­ப­தும் நிலை­மை­யக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரு­வ­துமே இதற்­கான கார­ணம் என்று கண்­கா­ணிப்­பா­ளர் டோ குறிப்­பிட்­டார்.

கடு­மை­யான காயம் அல்­லது மர­ணம் விளை­விக்­கக்­கூ­டிய ஒரு­வ­ரைத் தடுத்து நிறுத்த உட­லின் நடுப்­ப­கு­தி­யில் சுடு­வ­தற்­குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

50,000 வோல்ட் மின்­சா­ரத்­தைப் பாய்ச்­சக்­கூ­டிய 'டேசர்' கரு­வி­கள், துப்­பாக்­கி­கள், தடுப்­பு­கள் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்­தும் முறை­களுடன் அச்­சு­றுத்­து­ப­வரை முடக்­கக்­கூ­டிய சில பயிற்­சி­களும் ஆறு மாத அடிப்­ப­டைப் பயிற்­சி­யின்­போது அதி­கா­ரி­க­ளுக்­குக் கற்­றுத்­த­ரப்­ப­டு­கின்­றன.

நிலை­மையை மதிப்­பிட்டு பொது­மக்­க­ளுக்கோ பணி­யில் உள்ள அதி­கா­ரி­க­ளுக்கோ தீங்கு நேராத வண்­ணம், உரிய முடி­வெ­டுத்து அவர்­கள் தங்­கள் கட­மையை ஆற்­று­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர்க் காவல்­படை, அதிகாரிகளுக்கான அதன் பயிற்­சித் திட்­டங்­க­ளை­யும் நடை­மு­றை­க­ளை­யும் தொடர்ந்து மறு­ஆய்வு செய்­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!