$70,000 மோசடி; காவல்துறை எச்சரிக்கை

$70,000 மோசடி; காவல்துறை எச்சரிக்கை

1 mins read
70d06e7e-344f-4553-8de1-c2553a100e22
-

சிங்­கப்­பூ­ரில் இந்த மாதம் வங்­கித்­துறை மோச­டி­யில் 10 பேருக்கு மேல் எழு­ப­தா­யி­ரம் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகையை இழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய மோச­டிச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வ­ரு­வ­தா­கக் காவல்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. தொலை­பேசி அழைப்­பு­கள் அல்­லது குறுஞ்­செய்­தி­கள் மூலம் தொடர்­பு­கொண்ட மோச­டிக்­கா­ரர்­கள் வங்கி அதி­கா­ரி­க­ளைப் போல நடித்து ஏமாற்­றி­ய­தாக அது குறிப்­பிட்­டது.

வங்கி அட்டை விவ­ரங்­கள் ஊடு­ரு­வப்­பட்­டி­ருக்­க­லாம் என்று கூறி பின்­னர் வங்­கிக் கணக்கு விவ­ரங்­களை அவர்­கள் கேட்­பர். அதைத் தொடர்ந்து 'ஓடிபி' எனப்­படும் கடவு எண்­ணை­யும் கேட்­டுத் தெரிந்­து­கொள்­வர்.

தங்­கள் வங்­கிக் கணக்­கில் இருந்து அனு­ம­தி­யற்ற பணப் பரி­வர்த்­த­னை­கள் இடம்­பெற்­றது தெரி­ய­வந்த பிறகே பாதிக்­கப்­பட்­டோர் தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை அறிந்­து­கொண்­ட­னர்.

பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருக்­கும்­ப­டி­யும் வங்­கிக் கணக்கு அல்­லது அட்டை தொடர்­பான விவ­கா­ரங்­க­ளுக்கு அந்­தந்த வங்­கி­யின் அதி­கா­ர­பூர்வ இணை­யத்­த­ளத்தை நாடும்­ப­டி­யும் காவல்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. தவ­றான பரி­வர்த்­த­னை­கள் குறித்து வங்­கிக்கு உட­ன­டி­யா­கத் தக­வல் தெரி­விக்­கும்­ப­டி­யும் அது ஆலோ­சனை கூறி­யது.

இத்­த­கைய மோச­டி­கள் குறித்த தக­வல் அறிந்­தோர் 1800-255-0000 என்ற 24 மணி நேரத் தொலை­பேசி எண்­ணில் காவல்­து­றைக்­குத் தக­வல் அளிக்­க­லாம். அவ­சர உதவி தேவைப்­பட்­டால் 999 என்ற எண்­ணை­யும் அழைக்­க­லாம்.

ஆர்­வ­முள்­ளோர் காவல்­து­றை­யின் 'ஸ்பாட் த சைன்ஸ். ஸ்டாப் த கிரைம்ஸ்' எனும் மோச­டித் தடுப்­புப் பிர­சார இயக்­கத்­தில் இணை­ய­லாம். அண்­மைய தக­வல்­களை அதில் பெற்­றுக்­கொண்டு அவற்றை குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் பகிர்ந்­து­கொள்­ள அவர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.