ஹாக்கி ஆர்வத்தால் எதிலும் மனந்தளராமை

ஹாக்கி ஆர்வத்தால் எதிலும் மனந்தளராமை

2 mins read
75d5ff12-a259-48d6-8bda-a7633c1e1830
-

ஒவ்­வொரு முறை­யும் தோல்வி நிலைக்­குத் தள்­ளப்­ப­டும்­போ­தும் ஹாக்­கி­யைக் கைவி­டா­மல் இறு­கப் பிடித்­தி­ருந்­தார் அரசு. மேடு­பள்­ளம் நிறைந்த தன் விளை­யாட்­டுப் பய­ணத்தை நம்­பிக்­கை­யு­டன் தொடர்கிறார் இவர். அதே சம­யம், தனக்கு வழி­காட்­டிய ஆசி­ரி­யர்­

க­ளின் வழி­யி­லேயே சென்று எதிர்­கா­லத்­தில் கல்­வி­யா­ளர் ஆகும் கன­வைக் கொண்­டுள்­ளார் அவர்.

தேசிய ஹாக்கி அணி­யில் 2017ஆம் ஆண்­டில் இணைந்த அர­சுக்கு, சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்க வேண்­டும் என்ற நீண்டநாள் லட்­சி­யம் நிறை­வே­றியது. முந்­தைய தேசிய ஹாக்கி அணி­கள் போட்­டி­களில் முதல் மூன்று இடங்­க­ளைப் பிடித்­தி­ருந்த நிலை­யில், அந்த சாத­னை­யைக் கட்­டிக்­காக்­கும் கட­மை­யைத் தானும் கொண்டிருப்பதாக பகிர்ந்­து­கொண்­டார் அரசு.

தேசிய அணி­யு­டன் 2019ஆம் ஆண்டு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் வெண்­க­லப் பதக்­கத்தை வென்ற இவர், தங்­க­ளின் குறிக்­கோள் நிறை­வே­றிய அத்­த­ரு­ணத்­தின் உணர்ச்­சி­கள் மறக்­க­மு­டி­யா­த­வை­யென நெகிழ்ந்­தார்.

"என் குடும்­பத்­தி­னர் மிக­வும் பெரு­மைப்­பட்­ட­னர். இந்த ­வாய்ப்­புக்­காக நான் கடு­மை­யாக உழைத்­தி­ருந்­தேன். வாரத்­தில் ஐந்­தாறு முறை பயிற்சி செய்­ய­வேண்­டிய நிலை­யி­லும் நான் மனந்­த­ள­ர­வில்லை," என்­றார் தேசி­யக் கல்­விக் கழ­கத்­தில் பயிற்சி பெறும் 24 வயது சித அரசு.

ஜூரோங்­கி­லி­ருந்த தேசி­யக் கல்­விக் கழ­கத்­தி­லி­ருந்து பாசிர் ரிஸ் வட்­டா­ரத்­தில் உள்ள தன் பயிற்­சி­யி­டத்­துக்­குச் செல்ல அர­சுக்­குக் கிட்­டத்­தட்ட ஒன்­றரை மணி நேரம் பிடிக்­கும். தின­மும் பயிற்­சிக்­குச் சென்று வந்த இவர், நள்­ளி­ர­வில்­கூட தேசி­யக் கல்­விக் கழ­கத்­திற்­குச் சென்று தன் பாடங்­களை முடித்துள்ளார். பர­ப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லில், தான் உட­ல­ள­வில் மட்­டுமே சோர்ந்­த­தா­க­வும் மன­த­ள­வில் சோர்ந்­தி­ட­வில்லை என்­றும் கூறுகிறார் அரசு. கல்­வித்­து­றைக்­குத் தேவைப்­படும் பொறு­மை­யை­யும் ஒழுக்­கத்­தை­யும் இவ்­வி­ளை­யாட்டு தனக்­குக் கற்­றுக் கொடுத்துள்ளதாக இவர் கூறுகிறார்.