கிரிக்­கெட் விளை­யாட்டே உயிர்­நா­டி­யா­னது

ரோக­னுக்கு கிரிக்­கெட் விளை­யாட்டு எட்டு வய­தில் அறி­மு­க­மா­ன­போது, அது தன்­னை­யும் தன் அம்­மா­வை­யும் பெரி­த­ள­வில் ஈர்த்­து­வி­டும் என்று அவர் எதிர்­பார்க்­க­வில்லை. பதி­னான்கு வய­தில் தேசிய சிங்­கப்­பூர் ஆண்­கள் கிரிக்­கெட் அணிக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

ரோகனை கிரிக்­கெட் பயிற்­சி­களில் விட்­டுச் ­சென்­று­கொண்­டி­ருந்த ரோக­னின் அம்மா திரு­மதி மாலி­னி­யை­யும் அந்த ஆர்­வம் விட்­டு­வைக்­க­வில்லை. ஏறக்­கு­றைய நான்கு ஆண்­டு­க­ளுக்கு திரு­மதி மாலினி தேசிய பெண்­கள் கிரிக்­கெட் அணி­யில் விளை­யா­டி­னார்.

“அம்­மா­வும் நானும் சேர்ந்து பயிற்சி செய்­தி­ருக்­கி­றோம். அவ­ரி­டம் இருந்த உற்சாகம், என் கிரிக்­கெட் பய­ணத்­திற்கு வித்­திட்­டது. கிரிக்­கெட்­டுக்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுப்­பேன் என்று நான் கூறி­ய­போ­து அவர் என் மு­டி­வுக்கு ஆத­ர­வ­ளித்­தார்,” என்கி­றார் சிங்­கப்­பூர் நிர்­வாகப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வணிக நிர்­வா­கத் துறை­யில் பயி­லும் 22 வயது ரோகன் ரங்­க­ரா­ஜன்.

கடந்த 2019ல் ஆண்­க­ளுக்­கான ‘ஐசிசி டி20’ (ICC T20) உல­கக் கிண்­ணத் தேர்­வுச் சுற்­று­களில் சிங்­கப்­பூர் ஆண்­கள் கிரிக்­கெட் அணி தோல்வியைத் தழுவியது. வெற்றி நெருங்கி வரும் சமயத்தில் அந்த வாய்ப்பு தட்­டிப்­ப­றிக்­கப்­பட்­ட­தில் வருத்­த­மி­ருந்­தா­லும் உலக அணி­க­ளு­டன் விளை­யா­டிய அனு­ப­வத்­தி­லி­ருந்த படிப்­பி­னை­கள் ஏரா­ளம் என்­கிறார் ரோகன். இத்­த­கைய அனு­ப­வங்­கள் தன்னை வெற்­றிப்­பா­தைக்கு இட்­டுச்­சென்­றுள்­ள­தா­க­வும் கூறுகிறார் தொடக்க பேட்ஸ்­மே­னாக விளை­யா­டும் ரோகன். ஒழுக்­கத்தை விதைத்து, உறு­தி­யு­டன் உழைப்பதை கிரிக்­கெட் மூலம் இவர் கற்­றார். இந்த ஆண்டு சிங்­கப்­பூர் அணி எதிர்­நோக்கி உள்ள நான்கு கிரிக்­கெட் போட்­டி­கள், குறிப்­பாக, ஜூலை மாதம் இடம்­பெ­றும் உல­கக் கிண்­ணத் தேர்­வுச் சுற்­று­க­ளுக்­காக தான் கடு­மை­யாக உழைத்து வரு­வ­தாக ரோகன் கூறுகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!