எட்டு வய­தில் தொடங்கிய 'ஐஸ் ஹாக்கி' பய­ணம்

எட்டு வய­தில் தொடங்கிய 'ஐஸ் ஹாக்கி' பய­ணம்

2 mins read
7de20d4d-5ac3-441e-9cee-d10ab6c53762
-

சிங்­கப்­பூ­ரின் ஆக இளைய ஐஸ் ஹாக்கி விளை­யாட்­டா­ள­ரான முத்­துக்­கு­மார் கார்த்­தி­கே­யன், நாட்­டின் முதல் ஐஸ் ஹாக்கி வெண்­க­லப் பதக்­கத்தை இவ்­வாண்டு வென்­றார். இந்த இனிதான ­வெற்­றி­யைத் தனது அணி­யு­டன் கொண்­டா­டி­னார் இவர். கிர்­கிஸ்­தா­னின் பிஷ்­கேக் நக­ரில் நடை­பெற்ற 2022 உலக சாம்­பி­யன்­ஷிப் டிவி­ஷன் நான்கு, சர்­வ­தேச ஐஸ் ஹாக்கி போட்­டி­யே சிங்­கப்­பூர் அணி­யின் முதல் ஐஸ் ஹாக்­கிப் போட்­டி.

"தாய்­நாட்டை இந்த இளம் வய­தில் பிர­தி­நி­தித்த அனு­ப­வம் என் வாழ்­வில் முக்­கிய மைல்­கல் ஆகும். இந்த அனு­ப­வம் என் வளர்ச்­சிக்கு முக்­கி­ய­மா­னது," என்று நெகிழ்ச்சி யுடன் கூறுகிறார் கார்த்­திக். எட்டு வய­தில் பொழு­து­போக்­கா­கக் கற்­றுக்­கொள்­ளத் தொடங்­கிய விளை­யாட்டு, இன்று தன்னை உல­க­

மே­டைக்கு அழைத்­துச் சென்று தன் அடை­யா­ள­மா­கவே மாறி­விட்­ட­தாக பெரு­மி­தத்­து­டன் கூறுகிறார்.

ஆங்­கிலோ சீன தன்­னாட்­சிப் பள்­ளி­யில் பயி­லும் 16 வயது

கார்த்­தி­கே­யன், 2021ஆம் ஆண்­டில் தேசிய ஆண்­கள் ஐஸ் ஹாக்கி அணி­யில் சேர்க்­கப்­பட்­ட­போது தன் கனவு நன­வா­னது என்கி­றார். சக விளை­யாட்­டா­ளர்­க­ளின் மன உறு­தி­யும் ஒற்­று­மை­யும் இவ­ருக்­குப் படிப்­பி­னை­யாக அமைந்­தன.

அணி­யின் திற­னைக் காட்­டி­லும் முக்­கி­ய­மாக, ஒற்­று­மையே அணி­யின் வெற்­றி­யை­யும் தோல்­வி­யை­யும் நிர்­ண­யிக்­கிறது என்­ப­தை­யும் அவர் உணர்ந்­தார். காலை ஆறு மணிக்­குப் பள்­ளிக்­குச் செல்­லத் தயா­ரா­கும் கார்த்­தி­கே­யன், இரவு 11 மணிக்­குப் பின்­னரே வீடு திரும்­பு­வார். நேரக்­கட்­டுப்­பா­டும் சாதிக்­கும் துடிப்­புமே இவர் தனது பொறுப்­பு­க­ளைச் சிறப்­பாக ஆற்­றும் திடத்தை அளித்­துள்­ள­தாக இவர் பகிர்ந்­து­கொண்­டார்.

தனக்கு நண்­ப­ரா­கத் துணை நிற்­கும் தந்­தை­யும் நிதா­னத்­து­டன் தன்­னைக் கவ­னித்­துக்­கொள்­ளும் அன்­னை­யும் தன் பய­ணத்­தின் ஒவ்­வோர் அடி­யி­லும் பக்­க­ப­ல­மாக இருந்து வரு­வ­தாக கார்த்­தி­கே­யன் பகிர்ந்­து­கொண்­டார்.