வலைப்பந்து மீது தீரா மோகம்

வலைப்பந்து மீது தீரா மோகம்

2 mins read
8e3e6a67-c912-4201-ae74-a0bb0d947f65
-

விளை­யாட்டு என்­றாலே அதை ஒரு கை பார்க்­கா­மல் விட­மாட்­டார் ரீனா. பூப்­பந்து, டேக்­வாண்டோ, கோல்ஃப், தற்­காப்­புக் கலை எனப் பல்­வேறு விளை­யாட்­டு­க­ளைப் பள்ளி நட­வ­டிக்­கை­யா­க­வும் பொழு­து­போக்­கா­க­வும் இவர் மேற்­கொண்­டார். ஒரு­நாள் வலைப்­பந்து விளை­யாட்டு அவ­ருக்கு அறி­மு­க­மா­னது. அதன் மீது ஏற்­பட்ட மோகம் இன்­னும் தீரவே இல்லை என்று கூறு­கி­றார் ரீனா.

"வலைப்­பந்து உடல் சார்ந்த ஒரு விளை­யாட்டு மட்­டு­மன்று. எதி­ர­ணி­யி­னரை எடை போடு­

வ­தும் அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளைத் தீர்­மா­னிப்­ப­தும் மிக முக்­கி­யம். ஒவ்­வொரு போட்­டி­யும் ஒரு புது அனு­ப­வம்," என்­கிறார் கோல் காப்­பா­ள­ராக விளை­யா­டும் ரீனா திவ்யா மனோ­க­ரன், 23.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி நாள்­களில் விளை­யாட்டு அணி­யில் சேரா­மல் கல்­வி­யில் கவ­னம் செலுத்த முடி­வெ­டுத்­தார் ரீனா. அச்­ச­ம­யத்­தில் பள்ளி வலைப்­பந்து பயிற்­று­விப்­பா­ளர் தன்னை அவ்­வி­ளை­யாட்­டின் பக்­கம் ஈர்க்க முயன்­றதை நினை­வு­கூர்கிறார் இவர். வலைப்­பந்து விளை­யாட்­டில் இறங்கி ஐந்து ஆண்­டு­களே ஆன ரீனா, கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக தேசிய வலைப்­பந்து அணி­யில் பயிற்சி பெறு­கி­றார்.

"சக விளை­யாட்­டா­ளர்­க­ளு­டன் தினந்­தோ­றும் உழைத்து, அதன் பயனை நேர­டி­யா­கக் களத்­தில் காண்­பது ஓர் இன்­பம். ஒரே குடும்­பம் என ஆகி­விட்ட என் அணி­யி­ன­ரு­டன் தேசத்­துக்­காக விளை­யா­டு­வது ஓர் அங்­கீ­கா­ரமே," என்­கிறார் ரீனா. 2019ல் இடம்­பெற்ற ஆசிய இளை­யர் வலைப்­பந்து போட்­டி­களில் தன் முதல் அனைத்­து­லக களத்­தைக் கண்­டார். சிம் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சமூ­க­வி­யல் துறை­யில் பயி­லும் ரீனா, நிர­லி­டு­தல் தொடர்­பி­லும் பயின்று வரு­கி­றார். நிர­லி­டு­த­லும் வலைப்­பந்­தைப் போல சிந்­தித்­தலை அதி­கம் தூண்­டு­வ­தா­கக் கூறும் இவர், அதையே தன் வாழ்க்­கைத்­தொ­ழி­லாக அமைத்­தி­டத் திட்­ட­மி­டு­வ­தா­க­வும் பகிர்ந்­து­கொண்­டார்.