சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்குமான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவுள்ளது மலேசியாவின் 'பட்ஜெட்' விமான சேவை.
கொவிட்-19 பெருந்தோற்று சூழலால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து செயல்பட உள்ளது ஃபையர்ஃபிளை விமான சேவை.
சிலேத்தாரிலிருந்து சிலாங்கூரின் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்திற்குச் செல்லும் ஃபையர்ஃபிளை விமானத்திற்கான ஒரு வழி கட்டணம் $39 (119 ரிங்கிட்).
ஒவ்வொரு நாளும் இரண்டு விமான சேவைகள் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து செயல்படும் என ஃபையர்ஃபிளை தெரிவித்தது.

