பிரதமர் ஜப்பானுக்குப் பயணம்

பிரதமர் ஜப்பானுக்குப் பயணம்

1 mins read
8e3c98ea-5048-4f7b-a51a-d01a645c6f8f
-

பிர­த­மர் லீ சியன் லூங் இன்று முதல் இம்­மா­தம் 27ஆம் தேதி வரை பணி நிமித்தப் பய­ணம் மேற்­கொண்டு ஜப்­பான் செல்­கி­றார்.

பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை இத­னைத் தெரி­வித்­தது.

திரு லீ தமது பய­ணத்­தில், ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா உள்­ளிட்ட அர­சி­யல் தலை­வர்­க­ளை­யும் வர்த்­த­கத் தலை­வர்­களை­யும் அவர் சந்­தித்­துப் பேசு­வார்.

நிக்­கேய் வர்த்­தக செய்­திக் குழு­மம் ஏற்­பாடு செய்­யும் ஆசி­யா­வின் வருங்­கா­லம் தொடர்­பான 27ஆவது அனைத்­து­ல­கக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்­ளும் திரு லீ நாளை மறு­நாள் அதில் முக்­கிய உரை­யாற்­று­வார்.

பிள­வு­பட்ட உல­கில் ஆசி­யா­வின் பங்கை மறு­வ­ரை­ய­றுப்­பது என்­பது இந்­தக் கருத்­த­ரங்­கின் கருப்­பொ­ருள்.

பிர­த­ம­ரு­டன் அவ­ரது துணை­வி­யார், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், சுகா­தார மூத்த துணை­ய­மைச்­சர் ஜனில் புதுச்­சேரி ஆகி­யோ­ரும் செல்­கின்­ற­னர்.

பிர­த­மர் லீ ஜப்­பா­னி­யப் பய­ணம் மேற்­கொள்­ளும் வேளை­யில் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் தற்­கா­லி­கப் பிர­த­ம­ரா­கப் பொறுப்பு வகிப்­பார் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.