சிங்கப்பூரில் தீவிரவாத கருத்துகளை பரப்பியவர்

சிங்கப்பூரில் தீவிரவாத கருத்துகளை பரப்பியவர்

3 mins read
05beb324-5111-46cf-ac31-547aa5fb8b9d
-

அப்­துல் சோமத் பத்­து­பாரா என்­னும் இந்­தோ­னீ­சிய சமய போத­கர் சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளால் சில காலம் கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்­த­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

தீவி­ர­வா­தச் சித்தாந்­தத்­தில் ஈடு­பட்­டது தொடர்­பாக தனிப்­பட்ட சில­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­போது அவர்­கள் இந்த சமய போத­க­ரின் காணொ­ளி­க­ளைக் கண்­ட­தா­கத் தெரிய வந்­தது. அத­னைத் தொடர்ந்து இவரை அதி­கா­ரி­கள் கண்­கா­ணிக்­கத் தொடங்­கி­னர். புலன் விசா­ர­ணைக்கு உட்­பட்­ட­வர்­களில் 2020 ஜன­வ­ரி­யில் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் தடுத்து வைக்­கப்­பட்ட 17 வயது நப­ரும் அடங்­கு­வார்.

"இந்த நபர், சோமத்­து­டைய இதுபோன்ற யூடி­யூப் காணொளி வழி போத­னை­க­ளி­னால், தற்­கொ­லைத் தாக்­கு­தலை மேற்­கொள்­வது தன்னை சொர்க்­கத்­திற்கு இட்­டுச்­செல்­லும் என்­றும் நம்­பி­யுள்­ளார். இதுபோன்ற சோமத்­தின் பிர­சங்­கங்­கள் உல­க­ளா­விய விளை

­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை" என்று அமைச்­சர் கூறி­னார்.

சோமத் பாத்­தா­மி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு ஆறு பேரு­டன் புறப்­பட்­டார். தானா மேரா படகு முனை­யத்­தில் இம்­மா­தம் 16ஆம் தேதி நுழைவு மறுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அதே நாளில் பாத்­தா­மிற்கு திருப்பி அனுப்­பப்­பட்­டார்.

இவ­ரது தீவி­ர­வாத, பிரி­வி­னை­வாத போத­னை­கள் பல இன, பல சமய சிங்­கப்­பூர் சமூ­கத்­திற்கு ஏற்­பு­டை­யவை அல்ல என்று அப்­போது உள்­துறை அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

அத­னைத் தொடர்ந்து ஜகார்த்­ தா­வி­லுள்ள சிங்­கப்­பூர்த் தூத­ரக வளா­கத்­தி­லும் மேடா­னி­லுள்ள சிங்­கப்­பூர்த் துணைத் தூத­ர­கத்­தி­லும் கடந்த 20ஆம் தேதி ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

சிங்­கப்­பூ­ரில் நுழைவு மறுக்­கப்­பட்­டது முதல் இணை­யத்­தில் இவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் பதி­வேற்­றிய கருத்­து­க­ளை­யும் அமைச்­சர் வெளிப்­ப­டுத்­தி­னார்.

சிங்­கப்­பூர் குண்டு வைத்­துத் தகர்த்­தப்­பட வேண்­டும் என்று அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

மற்­றொரு கருத்து ஃபேஸ்புக்­கி­லி­ருந்து நீக்­கப்­பட்­டது. "2001ல் நியூயார்க்­கில் நிகழ்ந்த 9/11 தாக்­கு­த­லைப் போல உங்­கள் நாட்­டைத் தாக்­கு­வோம்," என்று ஒரு கருத்து காணப்­பட்­டது. சிறிய நாடு. ஒரே­யொரு ஏவு­க­ணை­யில் எல்­லாம் முடிந்­து­வி­டும்," என்­றும் ஒரு கருத்து வெளி­யி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் இது போன்ற பிளவு­ ப­டுத்­தும் உரை­கள் மற்­றும் சித்­தாந்­தங்­களை ஒரு­போ­தும் ஆத­ரிக்­காது. இதற்கு தனிப்­பட்ட எந்த ஒரு மனி­த­ருக்கோ, சம­யத்­திற்கோ, இனத்­திற்கோ விதி­வி­லக்கு அளிக்­கப்­ப­டாது.

இச்­செ­யல்­களில் சிங்­கப்­பூ­ரின் நிலை அனை­வ­ருக்­கும் பொது­வா­னது என்று திரு சண்­மு­கம் கூறி­னார்.

இதே­போன்று இதற்கு முன் நிகழ்ந்த சம்­ப­வங்­க­ளை­யும் அமைச்­சர் நினை­வூட்­டி­னார்.

2017ஆம் ஆண்­டில் இரண்டு வெளி­நாட்டு கிறித்­துவ சமய போத­கர்­க­ளுக்­கும் 2018ஆம் ஆண்டு ஓர் அமெ­ரிக்க கிறிஸ்­துவ சமய போத­க­ருக்­கும் சிங்­கப்­பூ­ரில் பிர­சங்­கம் செய்ய அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இவர்­கள் பிற சம­யங்­க­ளைப் பற்றி இழி­வான கருத்­து­களை கூறி­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சில வாரங்­க­ளுக்கு முன் இஸ்­லா­மி­யர்­கள் பற்­றிய ஒவ்­வாத சித்­தி­ரிப்­பி­னால் 'த காஷ்­மீர் ஃபைல்ஸ்' என்­னும் திரைப்­ப­டம் சிங்­கப்­பூ­ரில் தடை­செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூர் தனது பாது­காப்பு மற்­றும் சமய நல்­லி­ணக்­கத்தைக் கெடுக்­கும் எவ்­வித செயல்­பா­டு­

க­ளுக்­கும் எந்த சூழ­லி­லும் சோமத் போன்­றோ­ருக்கு வாய்ப்பு அளிக்­காது என்றும் அமைச்சர் கூறி­னார்.

இந்­தோ­னீசியா­வில் பிர­ப­ல­மான சோமத்தை, இன்ஸ்டகி­ரா­மில் 6.5 மில்­லி­யன் பேரும் யூடி­யூப்பில் 2.7 மில்­லி­யன் பேரும் ஃபேஸ்புக்­கில் 700,000 பேரும் பின்­பற்­று­கின்­ற­னர்.

சண்முகம்: இந்தோனீசிய சமய போதகர் கண்காணிக்கப்பட்டு வந்தார்