சிங்கப்பூர்-மலேசியா இடையே ஃபையர்ஃபிளை விமானச் சேவை

சிங்கப்பூர்-மலேசியா இடையே ஃபையர்ஃபிளை விமானச் சேவை

2 mins read
c737bf11-1e37-40f4-a751-6e0c2a22baa5
2019 ஏப்ரல் 21ஆம் தேதி ஃபையர்ஃபிளையின் முதல் விமானம் சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங்கியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலி­வுக்­கட்­டண விமான நிறு­வ­ன­மான ஃபையர்­ஃபிளை ஜூன் 13ஆம் தேதி­யி­லி­ருந்து மலே­சி­யா­வுக்­கான தனது சேவை­களை மீண்­டும் தொடங்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் கார­ண­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த விமா­னச் சேவை ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு மீள்­கிறது.

"நாங்­கள் மீண்­டும் வந்­து­விட்­டோம்," என்ற வாச­கங்­கள் ஃபையர்­ ஃபிளை இணை­யத்­த­ளத்­தில் நேற்று காணப்­பட்­டன.

ஜூன் 13 திங்­கட்கி­ழமை முதல் சிங்­கப்­பூ­ரின் சிலேத்­தார் விமான நிலை­யத்­தில் இருந்து இதன் சேவை தொடங்­கு­கிறது. கோலா­லம்­பூர் அருகே உள்ள சுபாங் செல்­வ­தற்­கான ஒரு­வ­ழிப் பய­ணக் கட்­ட­ணம் 37 வெள்­ளி­யாக (119 ரிங்­கிட்) நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

சுபாங்­கி­லுள்ள சுல்­தான் அப்­துல் அஸிஸ் ஷா விமான நிலை­யத்­திற்கு சிலேத்­தா­ரில் இருந்து ஒவ்­வொரு நாளும் இரு விமா­னச் சேவை­களை ஃபையர்­ஃபிளை இயக்­கும்.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முன்­னர் 2019ஆம் ஆண்­டு­வரை நாள் ஒன்­றுக்கு ஆறு விமா­னச் சேவை­கள் நடத்­தப்­பட்­டன. ஏடி­ஆர்72-500 என்­னும் இதன் விமா­னம் 72 பய­ணி­களை ஏற்­றிச் செல்­லக்­கூ­டி­யது.

"மலே­சிய எல்லை திறக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் ஃபையர்­ஃபிளை அதன் சேவை­க­ளைத் தொட­ர­வும் சிங்­கப்­பூர், மலே­சிய சமூ­கங்­களை இணைப்­ப­தில் பங்­காற்­ற­வும் இது சரி­யான தரு­ணம்," என்று ஃபையர்­ஃபிளை விமான நிறு­வன தலைமை நிர்­வாகி ஃபிலிப் சீ நேற்று தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டார்.

$80 மில்­லி­யன் செல­வில் வசதி­ கூட்­டப்­பட்ட சிலேத்­தார் பய­ணி­கள் முனை­யம் 2019ஆம் ஆண்டு திறக்­கப்­பட்­டது.

தற்­போது ஃபையர்­ஃபி­ளை­யின் சேவை­க­ளுக்கு உதவ இது தயா­ராக உள்­ள­தாக சாங்கி விமா­ன­நி­லை­யக் குழு­மத்­தின் அதி­காரி லிம் சிங் கியட் கூறி­னார். கொள்­ளை­நோய்ப் பர­வல் கார­ண­மாக ஈராணடுக­ளாக இந்த விமா­ன­நி­லை­யம் செயல்பட­வில்லை.

"கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட பின்­னர் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பய­ணத்­திற்­கான தேவை வலு­வ­டைந்­துள்­ளதை அறி­கி­றோம். இந்த விமான நிலை­யம் பய­ணி­களை வர­வேற்­கத் தயா­ராக உள்­ளது," என்­றார் திரு லிம்.

சேவை­கள் மீண்­டும் தொடங்­கி­னா­லும் ஃபையர்­ஃபிளை விமா­னத்­திற்­குப் போது­மான பயன் கிட்­டுமா என்று இன்­னும் தெரி­ய­வில்லை. கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு முன்­னரே, விமான இருக்­கை­களை நிரப்ப இந்­நி­று­வ­னம் சிர­மப்­பட்­டது.

சிங்­கப்­பூர்-சுபாங் விமா­னப் பாதை அவ்­வ­ள­வா­கப் பிர­ப­ல­ம­டை­யாத ஒன்று. வழக்­க­மாக 40 விழுக்­காடு விமான இருக்­கை­க­ளி­லேயே பய­ணி­கள் காணப்­ப­டு­வர்.

மேலும், இன்­னும் ராணுவ விமான நிலை­ய­மா­கப் பல­ரா­லும் கரு­தப்­படும் சிலேத்­தார் விமான நிலை­யம் ஃபையர்­ஃபிளை சேவை­யின் வெற்­றிப் பய­ணத்­துக்கு எந்த அள­வுக்கு உத­வும் என்று தெரி­ய­வில்லை.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் வான்­வெளி தொட­டர்­பில் நில­விய இரு­த­ரப்பு கருத்து வேறு­பாடு கார­ண­மாக 2019ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்­கள் சிலேத்­தார் விமா­ன­நி­லை­யப் பணி­கள் நிறுத்தி வைக்­கப்பட்­டி­ருந்­தன.