உடனுக்குடன் செய்தி: ஆசிய ஊடக விருது பெற்றார் தமிழ் முரசின் இர்‌‌‌ஷாத் முஹம்மது

உடனுக்குடன் செய்தி: ஆசிய ஊடக விருது பெற்றார் தமிழ் முரசின் இர்‌‌‌ஷாத் முஹம்மது

2 mins read
9bd42baa-69d4-4ab2-ac74-15106524fdfb
-

தமிழ் முரசு நாளிதழின் துணை செய்தி ஆசி­ரி­யர் இர்­‌‌‌ஷாத் முஹம்­மது (படம்), ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­க­ளு­டன் இணைந்து எழு­திய உட­ன­டிச் செய்தி ஒன்று ஆசிய ஊடக விரு­து­களில் தங்­கப் பதக்­கம் வென்­றுள்­ளது. WAN-IFRA எனும் உலக செய்தி பதிப்­பா­ளர்­கள் சங்­கத்­தின் ஆசிய ஊடக விரு­து­கள் 2022 நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு மொத்­தம் நான்கு விரு­து­கள் கிடைத்­தன.

இதர ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­க­ளு­டன் இணைந்து கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் தஞ்­சோங் பகா­ரில் நடந்த சாலை விபத்து குறித்து திரு இர்­ஷாத் முஹம்­மது எழு­திய 'தீப்­பற்­றிய கார் விபத்­தில் ஐவர் மர­ணம்' என்ற செய்தி தலை­சி­றந்த உட­ன­டிச் செய்­தி­யா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் டேவிட் சன், கோக் யுஃபெங், ஃபேபியன் கோ, சியோ சூ-ஆன், எங் வெய் காய் ஆகி­யோ­ரு­டன் இவ்­வி­ரு­தினை திரு இர்­ஷாத் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"சீனப் புத்­தாண்­டின் இரண்­டா­வது நாளா­னது, என்­னு­டைய பணி­யில் மறக்­க­மு­டி­யா­த­தோர் அனு­ப­வ­மாக அமைந்­தது. அன்று அதி­காலை நடந்த சாலை விபத்து குறித்த செய்தி திரட்­டும் பணி கொடுக்­கப்­பட்­ட­போது, ஐந்து பேர் பலி­யான ஒரு கொடூ­ரச் சம்­ப­வ­மாக அது இருக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை. சம்­பவ இடத்­துக்­குச் சென்­ற­போ­து­தான் எந்த அள­வுக்­குப் பரி­தா­ப­மான சம்­ப­வம் அது என்று எங்­க­ளுக்­குத் தெரிந்­தது," என்று திரு இர்­ஷாத் தனது அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

"எந்­த­வொரு திட்­ட­மும் இன்றி, திடீ­ரென ஒரு குழு நட­வ­டிக்­கை­யில் தள்­ளப்­பட்­டது போன்­ற­தோர் உணர்வு இருப்­பி­னும், ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் கைகோத்து அன்று நடந்­த­வற்­றை­யெல்­லாம் ஒருங்­கி­ணைத்து தொகுத்து வழங்­கி­னோம்," என்­றார் அவர்.

செய்தியாளர்கள் விருது வென்­றது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்த எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் தலைமை நிர்­வாக அதி­காரி திரு­வாட்டி டியோ லே லிம், "செய்­தித்­தாள் வடி­வமைப்பு, கட்­டு­ரைக் கருத்­து­கள், புகைப்­பட இத­ழி­யல், தக­வல் வரை­கலை, விளம்­ப­ரம் ஆகி­ய­வற்­றில் தலை­சி­றந்த பதிப்­புத் தரங்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­க­மு­டைய இந்த வரு­டாந்­திர விருது நிகழ்­வில் நாம் நான்கு விரு­து­க­ளை வென்றுள்­ளோம். செய்­தித்­தாள் பதிப்­புத் துறை­யில் நாம் தலை­சி­றந்து விளங்­கு­கி­றோம் என்­ப­தற்கு நமது செய்­தி­யா­ளர்­க­ளின் சாத­னை­களே சான்று," என்­றார்.

சாவ்­பாவ் சீன நாளி­தழ் புகைப்­ப­டச் செய்­தி­யா­ளர் திரு குவோங் காய் சுங் விளை­யாட்­டுப் புகைப்­ப­டப் பிரி­வில் தங்கப் பதக்­கம் வென்­றார். அதே பிரி­வில் வெள்­ளிப்பதக்­கம் வென்­றார் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் புகைப்­ப­டச் செய்­தி­யா­ளர் கெவின் லிம். தலை­சி­றந்த நாளி­தழ் விளம்­ப­ரப் பிரி­வில் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்டுக்கு வெள்­ளிப் பதக்­கம்.