தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரபுடைமையோடு சிறுவர்களை இணைக்கும் இஸ்தானா உயிரோவியக் காணொளி

1 mins read
f53d6fb2-9c9c-4144-a87a-8f8329a37489
'பிக்னிக்' நிகழ்ச்சியில் குடும்பங்களோடு உரையாடி மகிழ்ந்த அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிறு­வர்­க­ளுக்­குப் பிடித்­த­மான தொழில்­நுட்­பத் தளங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தும் அவை அந்தச் ­சி­று­வர்­களை ஈர்ப்­ப­தில் வெற்­றி­கண்­டுள்­ள­னவா என ஆராய்­வ­தும் மிக முக்­கி­யம் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் வலி­யு­றுத்­தி­யுள்­ளார். ஈராண்­டு­க­ளுக்­குப் பின்­னர் அதி­பர் ஹலி­மா­வோடு நேற்று சிறு­வர்­க­ளுக்­கான 'பிக்­னிக்' கூட்­ட­ம் ஒன்­றும் புத்­த­கங்­க­ளின் கதை­யை­யொட்­டிய உயி­ரோ­வி­யக் காணொளி வெளி­யீடு ஒன்­றும் இஸ்­தா­னா­வில் ஏற்­பாடு செய்யப்பட் ­டி­ருந்­தன.

உயி­ரோ­வி­யத்­தின் கதை பின்­னணி 2019ல் இஸ்­தானா 150ஆம் ஆண்­டின் நிறை­வுக் கொண்­டாட்­டத்­தில் வெளி­யி­டப்­பட்ட பிள்­ளை­

க­ளுக்­கான கதைப்­புத்­த­கங்­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டது. 'த கூரி­யஸ் சௌன்ட்ஸ் ஆஃப் த இஸ்­தானா' என்ற தலைப்­பில், விருந்­தி­னர் அறை­யில் இந்த உயி­ரோ­வி­யம் காட்­டப்­பட்­டது.

சுற்­றுலா வழி­காட்டி ஒரு­வர், இஸ்­தா­னா­வி­லுள்ள சிறப்பு அம்­சங்­க­ளை­யும் அதன் சுற்­றுப்­பு­றத்­தை­யும் சிறு­வர்­க­ளுக்­குச் சுற்­றிக் காட்­டு­கி­றார். அதி­பர் ஹலிமா, பல்­லின சமு­தா­யத்தை பிர­தி­நி­திக்­கும் குரல் கொண்ட சிறு­வர்­கள் நால்­வ­ரின் கதா­பாத்­தி­ரங்­கள் என பல உண்மைக் கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கொண்டு நீ ஆன் பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­க் குழு, அதி­பர் அலு­வ­ல­கத்­தோடு இணைந்து இதனைத் தயா­ரித்­துள்­ளது.

"புத்­த­கங்­க­ளைப் படிக்க பிடிக்­குமா அல்­லது புத்­த­கத்­தில் வரும் கதையை உயி­ரோ­விய வடி­வில் பார்க்க பிடிக்­குமா என நான் சிறு­வர்­க­ளி­டம் கேட்­ட­போது அனை­வ­ரும் உட­ன­டி­யா­கவே அவர்­கள் உயி­ரோ­விக் காணொ­ளி­யைக் காண விரும்­பு­வார்­கள் என்று என்­னி­டம் கூறி­னர்," என பகிர்ந்­து­கொண்­டார் அதி­பர் ஹலிமா.

உயி­ரோ­வி­யத்­தைத் தயா­ரித்­தி­ருந்த நீ ஆன் பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­ ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரி­யும் ரையன் சின், உயி­ரோ­வி­யத்தை படிப்­ப­டி­யாக செய்து முடிக்க ஆறு மாதங்­கள் ஆனதாகக் கூறி­னார்.