குழந்தைகள் மீது பாலியல் கவர்ச்சியை ஏற்படுத்தும் ஒருவித குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவருக்கு அதிகபட்சத் தண்டனையாக 20 ஆண்டு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த 60 வயது ஆடவர் மூன்று வயதுக்குட்பட்ட இரு பேரக் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.
இவர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அபாயம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்ட மருத்துவ ஆய்வைத் தொடர்ந்து அதிகபட்சத் தண்டனைக்கு அரசுத் தரப்பு கோரிக்கை வைத்தது.

