தீபாவளிச் செலவுக்கும் காதலிக்குப் பரிசு வாங்கவும் கொள்ளை

தீபாவளிச் செலவுக்கும் காதலிக்குப் பரிசு வாங்கவும் கொள்ளை

2 mins read
cff55e9a-0094-4ed3-b0d2-88bdd622319b
கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த 'ஓ.டி. கிரெடிட்' நிறுவனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங்­கில் கடன் வழங்­கும் நிறு­வ­னத்­தில் ஆயு­தம் தாங்­கிய கொள்­ளை­யில் ஈடு­பட்ட குற்­றத்­திற்­காக 23 இளை­யர் ஒரு­வ­ருக்கு ஐந்­தாண்டு, எட்டு மாதம், ஐந்து வாரம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மேலும் 12 பிரம்­ப­டி­களும் $3,000 அபராதமும் விதிக்­கப்­பட்­டன.

கார்த்­திக் ஸ்டா­லின்­ராஜ் என்­ப­வ­ருக்கு ஆயு­தந்­தாங்­கிய கொள்­ளை­யு­டன் இதர பல குற்­றங்­க­ளுக்­கா­க­வும் இந்­தத் தண்­ட­னை­கள் நேற்று விதிக்­கப்­பட்­டன.

கத்திக்குத்து, காவல்துறை அதிகாரி மீது காரி உமிழ்ந்தது, கொள்ளைநோய் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது மது குடிக்க மற்றவர்களுடன் சேர்ந்து சென்றது, ஜூரோங் சென்ட்ரல் பூங்காவில் தூங்கிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரின் உடமைகளைத் திருடியது ஆகியன கார்த்திக் ஈடுபட்ட மற்ற குற்றங்கள்.

2020ஆம் ஆண்டு தீபா­வ­ளி­யைக் கொண்­டா­ட­வும் தமது காத­லிக்­குப் பரிசு வாங்­க­வும் கார்த்­திக்­கிற்­குப் பணம் தேவைப்­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அதற்­காக, 135 ஜூரோங் கேட்வே ரோட்­டில் உள்ள 'ஓ.டி. கிரெ­டிட்' என்­னும் கடன் வழங்­கும் நிறு­வ­னத்­தில் கோட்டா குமார் ஜெஸ்­வந்த், 20, துஷ்­யேந்­தர் சேக­ரன், 22, ஆகிய தமது நண்­பர்

­க­ளு­டன் சேர்ந்து கொள்­ளை­ய­டிக்­கத் திட்­டம் தீட்­டப்­பட்­டது.

எப்­போ­தும் இரு பெண்­கள் மட்­டுமே இருப்­பார்­கள் என்­ப­தால் இந்­நி­று­வ­னத்­திற்­குக் கும்­பல் குறி­வைத்­தது. 2020 நவம்­பர் 19ஆம் தேதி மாலை மூவ­ரும் அந்த நிறு­வ­னத்­திற்குள் புகுந்­த­னர்.

நிறு­வ­னத்­தின் மேலா­ள­ரான 36 வய­துப் பெண்­ணைக் கத்­தி­யைக் காட்டி மிரட்டி அங்­கி­ருந்த பணத்தை அவர்­கள் கொள்­ளை­ய­டித்­த­னர். கொள்­ளைப் பணத்­தில் $14,500 காத்­திக்கிற்­குக் கிடைத்­தது.

மூவ­ரும் புத்­தா­டை­கள் வாங்க பூகிஸ் சென்­ற­னர். கார்த்­திக் தமது காத­லிக்­காக ஐஃபோன் 12 புரோ மேக்ஸ் வாங்­கி­னார்.

மறு­நாள் அதி­காலை 1.35 மணி­ய­ள­வில் மூவ­ரும் கேலாங் வட்­டா­ரத்­தில் காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

குற்­றச் சம்­ப­வம் நிகழ்ந்­த­போது பதின்­ம­வ­யது என்­ப­தால் கோட்டா, சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்கு அனுப்­பப்­பட்­டார். மூன்­றா­ம­வ­ரான துஷ்­யேந்­த­ருக்கு ஈராண்டு சிறை­யும் ஆறு பிரம்­ப­டி­களும் ஏற்­கெ­னவே விதிக்­கப்­பட்­டன.