என்யுஎஸ் ஆய்வு: விலங்குகளால் ஊழியர்களிடத்தில் கருணை கூடியது

என்யுஎஸ் ஆய்வு: விலங்குகளால் ஊழியர்களிடத்தில் கருணை கூடியது

1 mins read
1c6bc877-6437-48c5-8fb5-e3e910987441
-

விலங்குகளோடு தொடர்புள்ள தங்கள் வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, தம்மை அறியாமலேயே ஒரு பலன் கிட்டுகிறது. அவர்களுக்குள் கருணையுணர்வு அதிகரிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

இதனால் அவர்கள் தங்களின் சக ஊழியர்களுடன் மேலும் சிறப்பான முறையில் இணைந்து செயல்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பேச முடியாத நிலையில் விலங்குகள் வேறு வழிகளில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் அவற்றை மனிதர்கள் அறிவதும் வழி கருணை உணர்வு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.