நிதிச் சேவைக்குத் தரவு இணைப்பு ஊக்குவிப்பு

நிதிச் சேவைக்குத் தரவு இணைப்பு ஊக்குவிப்பு

1 mins read
35210ad8-9307-4c88-a7aa-ad183b390adf
-

நிதிச் சேவை­க­ளுக்­கான தரவு இணைப்பை ஊக்­கு­விக்­கும் தங்­களது திட்­டம் குறித்து சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் அனைத்­து­லக நிதிக்­கான சுவிஸ் மாநிலச் செய­ல­க­மும் கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளன.

நிதித் துறை தொடர்­பான தரவு­களை வெளி­நாட்­டுக்கு அனுப்­பு­வ­தும் அவற்­றைச் சேக­ரிப்­ப­தும் அவற்­றைப் பாது­காப்­ப­தும் வச­தி­யாக அமைய வேண்­டும் என்­ப­தற்­காக ஒழுங்­கான விதி­மு­றை­களும் கொள்­கைக் கட்­ட­மைப்­பு­களும் அவ­சி­யம் என்­பதை இரு தரப்­பு­களும் அறி­வ­தா­கத் தெரி­வித்­தன. வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தர­வு­களும் ரக­சி­யத்­தன்மையும் காக்­கப்­ப­டு­வ­தை­யும் இரு சாரா­ரும் உறு­தி­ப­டுத்த விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டன.