விறுவிறுப்பு சேர்க்கும் புதுப்பிப்புப் பணிகள்

விறுவிறுப்பு சேர்க்கும் புதுப்பிப்புப் பணிகள்

2 mins read
36dd97b7-682c-4c35-9e7e-63f92b218e72
புதுப்பிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, கூரையுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'கில்மன் பேரக்ஸ்' கலைக் குழுமத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள்

கலைக் குழு­ம­மான 'கில்­மன் பேரக்ஸ்' பகு­தி­யைப் புதுப்­பிக்­கும் பணி­கள் முடி­வ­டைந்­த­வு­டன் விவ­சா­யி­ சந்­தை­கள், சிறிய உண­வ­கங்­கள், 'பண்­ணை­யில் இருந்து மேசை வரை' உண­வ­கங்­கள் உள்­ளிட்ட சிறப்­பம்­சங்­களை அங்கு செல்­வோர் காண­லாம்.

அங்கு கூடு­தல் உணவு, பானம், வாழ்வி­யல் அம்­சங்­களை அறி­முகம் செய்­வ­தற்­கான திட்­டங்­களை சிங்கப்­பூர் நில ஆணை­யம் நேற்று அறி­வித்­தது.

அந்­தப் பகு­தி­யின் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளை­யும் ஆணை­யம் மேம்­ப­டுத்­தும். எடுத்­துக்­காட்­டாக, மூடப்­பட்ட நடை­பா­தை­களும் புதிய விளை­யாட்டு இடம் ஒன்­றும் அமைக்­கப்­படும்.

அலெக்­சாண்­டிரா சாலைக்கு அரு­கே­யுள்ள கில்­மன் பேரக்ஸ் கலைக் குழு­மத்­துக்கு விறு­விறுப்பைச் சேர்க்­கும் புதிய முயற்சி­யாக இத்­திட்­டம் அமை­கிறது. அங்கு வரு­ப­வர்­கள் எண்­ணிக்கை குறைந்­த­தால் கடந்த சில ஆண்டு­களில் பல்­வேறு கலைக் காட்சிக்­கூ­டங்­கள் அங்­கி­ருந்து வெளி­யே­றின.

கில்­மன் பேரக்ஸ் புதுப்­பிப்­புப் பணி­கள் இவ்­வாண்டு பிப்­ர­வரி முதல் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை இரு கட்­டங்­களாக நடை­பெறும். அர­சாங்க சொத்­து­க­ளி­ல் இ­ருந்து கூடு­தல் பல­னைப் பெற சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தின் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக இந்­தப் புதுப்­பிப்­புப் பணி­கள் விளங்கு­வதாக கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­னார்.

"மாறு­பட்ட வாழ்­வி­யல், கலை, படைப்­பாற்­ற­லுக்­கு­ரிய இடங்­களை அமைப்­ப­தன் மூலம், அனை­வ­ரும் ரசித்து மகி­ழக்­கூ­டிய துடிப்­பான ஒரு பகு­தி­யாக கில்­மன் பேரக்ஸ் விளங்க இந்­தப் புதுப்­பிப்­புப் பணி­கள் வகை­செய்­யும்," என்­று அவர் சொன்னார்.

1936ல் கட்­டப்­பட்ட இந்த இடம், 6.6 ஹெக்­டர் பரப்­ப­ர­ள­வில் அமைந்­துள்­ளது. இது 12 காற்­பந்­துத் திடல்­க­ளின் அள­வுக்­குச் சமம்.

இந்­தப் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­கான செலவு ஏறக்­கு­றைய $2 மில்­லி­யன்.

கலைக் குழு­ம­மாக மாறிய கில்மன் பேரக்ஸ் 2012ல் திறக்­கப்­பட்­டது. 2020 மார்ச் மாதம் இந்­தப் பகு­தி­யின் நிர்­வா­கம் ஜூரோங் நகராண்­மைக் கழ­கத்­தி­ட­மி­ருந்து (ஜேடிசி கார்ப்) சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­துக்கு மாறி­யது.