'இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிராக கருத்து உடையோரை நிராகரியுங்கள்'
இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிராக கருத்துகள் உடைய சமய போதகர்களை நிராகரிக்கும்படி சமய மறுவாழ்வுக் குழு முஸ்லிம்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு தனிநபரையும் குறிப்பிடவில்லை. ஆனால், தீவிரவாத போதனைகளைக் கொண்டிருந்ததன் தொடர்பில் இந்தோனீசிய சமய போதகரான அப்துல் சோமத் பத்துபாரா சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்து குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை சமய மறுவாழ்வுக் குழு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது.
"இந்த நாட்டில் பிரிவினைவாத கருத்துகளுக்கு இடமில்லை என்ற சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம்," என்று அக்குழு கூறியது.
சோமத், சிங்கப்பூர் அதிகாரிகளால் சில காலம் கண்காணிக்கப்பட்டு வந்ததாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
தீவிரவாதச் சித்தாந்தத்தில் ஈடுபட்டது தொடர்பாக தனிப்பட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது அவர்கள் அந்த சமய போதகரின் காணொளிகளைக் கண்டு அவரது போதனைகளைப் பின்தொடர்ந்ததாகத் தெரியவந்தது. அதிலிருந்து அதிகாரிகள் சோமத்தை கண்காணிக்கத் தொடங்கினர்.
சட்டக் கல்விக்கான உபகாரச் சம்பளம் விரிவாக்கம் காண்கிறது
வழக்கறிஞர்களாக விரும்பும் குறைந்த வருமானக் குடுமபங்களைச் சேர்ந்த கூடுதலான மாணவர்கள், கல்விக் கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களது கனவுகளை நனவாக்க இயலும். சட்டக் கல்விக்கான உபகாரச் சம்பளம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். சிங்கப்பூர் சட்டக் கல்வி பயிற்சிக் கழகம் இந்த உபகாரச் சம்பளத்தை வழங்குகிறது.

