சொந்த மடிக்கணினிக்கு சட்டவிரோதமாக கோப்புகளை நகலெடுத்தவருக்கு அபராதம்

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணைய அதி­காரி ஒரு­வர், தமது வேலை மடிக்­க­ணி­னி­யில் இருந்து சொந்த மடிக்­க­ணி­னிக்கு கோப்பு­களை நகல் எடுத்­தார். பணி­யி­லி­ருந்து வில­கிய பின்­ன­ரும் தாம் நகல் செய்த அந்­தக் கோப்பு­களை அவர் தக்­க­வைத்துக்­கொண்­டார்.

அதிகாரத்துவ ரக­சிய சட்­டத்­தின்­கீழ் இது குற்­ற­மா­கும்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் முன்­னாள் உத­விச் சுற்றுப்­புற மேலா­ள­ரான பெனி டான் யோங் லியாங், 34 (படம்), அதிகாரத்துவ ரக­சிய சட்­டத்­தின்­கீழ் குற்றம் புரிந்­தது நிரூ­ப­ண­மா­னது. அவ­ருக்கு நேற்று $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

2020 அக்­டோ­பர் 19ஆம் தேதி, தமது பதவி வில­கல் கடி­தத்தை டான் சமர்ப்­பித்­தார். ஆணை­யத்­தில் தமது கடைசி வேலை நாள் நவம்­பர் 19ஆம் தேதி என்று அவர் அதில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அக்­டோ­பர் 22ஆம் தேதி, ஆணை­யத்­தின் மனி­த­வ­ளப் பிரிவு டானுக்கு மின்­னஞ்­சல் ஒன்றை அனுப்­பி­யது. பணி­யி­லி­ருந்து விலகிய பின்­ன­ரும் அதிகாரத்துவத் தக­வ­லைப் பாது­காக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யம் அதில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதை அத்­து­மீ­றி­னால் அதிகாரத்துவ ரக­சிய சட்­டத்­தின்­கீழ் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­படும் என்­றும் அவ­ரி­டம் எச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆணை­யத்­தில் அவர் பணி­புரிந்த கடைசி வாரத்­தில், வேலை மடிக்­க­ணி­னி­யில் இருந்து சொந்த மடிக்­க­ணி­னிக்கு 4,310 கோப்­பு­களை டான் நகல் எடுத்­தார். அவற்­றின் மொத்த அளவு 32.05ஜிபி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!