ஐந்து ஆண்டு இடைவேளைக்குப் பிறகு நடைபெறும் ராணுவ பொது வரவேற்பு நிகழ்ச்சி

ஐந்து ஆண்டு இடை­வே­ளைக்­குப் பிறகு இந்த வார­யி­று­தி­யில் ராணுவ பொது வர­வேற்பு நிகழ்ச்சி மீண்­டும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. வரு­கை­யா­ளர்­கள் ராணுவ மித­வை­யில் இருந்­த­வாறு மரினா பே நீர்ப்­ப­கு­தி­யில் கடல்­உலா செல்­ல­லாம்.

ராணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பாலங்­களை அமைக்க சிங்­கப்­பூர் ராணு­வத்­தின் போர்ப் பொறி­யா­ளர்­கள் 'எம்3ஜி கிரா­ஃப்ட்' எனப்­படும் இந்த மித­வை­யைப் பயன்­ப­டுத்­து­வது உண்டு. மரினா பே நீர்ப்­பகுதி­யில் வரு­கை­யா­ளர்­களை அழைத்துச்­செல்ல இந்த மித­வை­தான் பயன்­படுத்­தப்­படும்.

எஃப்1 பிட் கட்­ட­டத்­துக்கு அரு­கி­லுள்ள கரை­யோ­ரப் பகு­தி­யில் அந்த மித­வை­யின் பய­ணம் தொடங்­கப்­படும். கண்­காட்­சி­யின் மற்ற அம்­சங்­கள் எஃப்1 பிட் கட்­ட­டத்­தில் இடம்­பெ­றும்.

தேசிய தினக் கொண்­டாட்­டங்­களின்­போது சிங்­கப்­பூர் கொடி­யைப் பறக்­க­விட்­டுச் செல்­லும் 'சினூக்' ஹெலி­காப்­ட­ரி­லும் ஏறி வரு­கை­யா­ளர்­கள் செல்­ல­லாம். 'டெரெக்ஸ்', 'பயோ­னிக்ஸ்' போன்ற இதர ராணு­வக் கவச வாக­னங்­க­ளி­லும் அவர்­கள் சென்­று­வ­ர­லாம்.

'சார்21' துப்­பாக்­கி­யைக் கொண்டு பாவனை சண்­டைப் பயிற்சி­யி­லும் அவர்­கள் ஈடு­ப­ட­லாம்

இவ்­வாண்­டின் பொது வர­வேற்பு நிகழ்ச்சி மூன்று வார­யி­று­தி­களில் நடை­பெ­றும். பிர­தான கண்­காட்சி எஃப்1 பிட் கட்­ட­டத்­தில் மே 28 முதல் 30ஆம் தேதி­வரை நடை­பெறும். இதர இரு கண்­காட்­சி­கள் குடி­யி­ருப்­பா­ளர்­கள் வசிக்­கும் பொங்­கோ­லி­லும் பீஷா­னி­லும் நடை­பெறும். பொங்­கோ­லில் நடை­பெ­றும் கண்­காட்சி ஜூன் 3 முதல் 5 வரை­யிலும் பீஷா­னில் கண்­காட்சி ஜூன் 10 முதல் 12 வரை­யி­லும் நடை­பெறும்.

ஆளில்லா வானூர்­தி­க­ளுக்­கான உள்­புற பகு­திக்கு வரு­கை­யா­ளர்­கள் தங்­கள் சொந்த வானூர்­தி­களைக் கொண்டு வந்து அவற்றைப் பறக்­க­வி­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!