மாணவியிடம் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

மாணவியிடம் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

2 mins read
abb59295-6ff5-4141-b55b-fa2011624bd7
-

சிங்­கப்­பூ­ரின் தலை­சி­றந்த பள்­ளி­களில் ஒன்­றில் வர­லா­ற்றுப் பாட ஆசி­ரி­ய­ராக இருந்த ஒரு­வ­ருக்­கும் வயது குறைந்த மாணவி ஒரு­வருக்­கும் இடையே 2011ஆம் ஆண்­டில் கள்­ளத் தொடர்பு ஏற்­பட்­டது. அப்­போது அந்த மாண­வி­யி­டம் அநா­க­ரி­க­மான செயல்­களில் ஈடு­பட்ட அந்த ஆட­வ­ருக்கு நேற்று 15 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2018ல் இந்த வழக்கு காவல்­து­றை­யின் கவ­னத்­திற்­குக் கொண்டு வரப்­பட்­டது. தமக்கு 15 வய­தாக இருந்­த­போது நிகழ்ந்த இந்­தக் குற்­றத்தை வெளி­யில் சொல்­லா­மல் மௌனம் காத்து வந்த அந்த மாணவி, 2018ல் அதுபற்றி தெரிவித்­தார்.

இந்­தக் குற்­றத்­தைத் தொடர்ந்து அந்த மாணவி மனச்­சோர்­வுக்கு ஆளா­ன­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. உண­வ­ருந்­து­வதைக் குறைத்­துக்­கொண்ட அவர், கடந்த ஆண்டு மே மாதம் உயிரை மாய்த்­துக்­கொண்­டார். அப்­போது அவ­ருக்கு வயது 25.

திரு­ம­ண­மான அந்த 47 வயது குற்­ற­வாளி, சிறார்­கள், இள வயதினர் சட்­டத்­தின்­கீழ் இளையர் ஒரு­வ­ரி­டம் அநா­க­ரி­க­மான செயல்­களில் ஈடு­பட்­ட­தாக 2020 நவம்­பரில் இரு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்­குத் தண்­டனை விதிப்­ப­தில் மற்ற இரு குற்­றச்­சாட்­டு­களும் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்ட அந்த மாண­வி­யின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்க அந்­தக் குற்­ற­வாளி, அவர் பணி­பு­ரிந்த பள்ளி பற்­றிய விவ­ரங்­களை வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

இந்த வழக்கு குறித்து மாவட்ட நீதி­பதி எடி தாம் கூறு­கை­யில், "குற்­றங்­க­ளால் ஏற்­படும் நீண்­ட­கால விளை­வு­கள், ஒரு­வ­ரின் உயிரைப் பறிக்­கும் அள­வுக்கு வழி­விடு­கின்­றன என்­பதை இந்த வழக்கு காட்­டு­கிறது.

"இளையர் ஒரு­வர் மீது புரி­யப்­படும் பாலி­யல் செயல், மிக மோச­மான விளைவை ஏற்­ப­டுத்­த­லாம் என்­ப­தை­யும் இது காட்­டு­கிறது. என­வே­தான், பாலி­யல் செயல்­களில் இருந்து இளை­யர்­களைப் பாது­காக்­கவே சட்­டம் நடை­மு­றை­யில் உள்­ளது," என்று விவ­ரித்­தார்.

குற்­ற­வா­ளி­யான அந்த முன்­னாள் ஆசி­ரி­யர் மீது மற்­ற­வர்­கள் அபி­மா­னம் கொண்­டி­ருந்­த­னர். அந்த வகை­யில் அந்த மாணவி அவர் மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை அவர் தவ­றா­கப் பயன்­படுத்­திக்­கொண்­ட­தாக நீதி­பதி சொன்­னார்.

அந்த ஆட­வ­ருக்கு இரு­முனை கோளாறு (பைபோ­லர் டிஸ்­ஆர்­டர்) இருந்­த­தாக முன்­ன­தாக நீதி­மன்றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், அவர் குற்­றம் புரிய அவ­ருக்கு இருந்த மன­ந­லப் பிரச்­சினை கார­ண­மல்ல என்­பது மன­ந­லப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது. எனவே, சிறைத் தண்­ட­னைக்­குப் பதி­லாக அவ­ருக்­குக் கட்­டாய சிகிச்சை உத்­த­ர­வைப் பிறப்­பிக்க இய­லாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.