ஃபேர்பிரைஸில் நான்கு சமையல் எண்ணெய்களுக்கு 10% தள்ளுபடி

ஃபேர்பிரைஸில் நான்கு சமையல் எண்ணெய்களுக்கு 10% தள்ளுபடி

1 mins read
33abfd5a-ed73-4619-9928-61acce989fba
-

கொவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பாலும் ர‌ஷ்ய-உக்ரேன் போரின் தாக்கத்தாலும் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகளைச் சமாளிக்கும் விதமாக என்டியுசி ஃபேர்பிரைஸ் கடைத்தொகுதி அதன் நான்கு பிரபல சமையல் எண்ணெய்களுக்கு ஒரு வாரத்திற்கு (மே 25 முதல் ஜூன் 1) 10% தள்ளுபடி வழங்கவுள்ளது.

நான்கு சமையல் எண்ணெய்கள்:

  1. நைவ் பிராண்ட் சமையல் எண்ணெய் (2 லிட்டர்) - 7.20, (வழக்கமான விலை- $8.05)
  2. ரைஸ் ஃபீல்டு 100% ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் (2 லிட்டர்)- $8.30 (வழக்கமான விலை-$9.25)
  3. டக் பிராண் வெஜெடபல் சமையல் எண்ணெய் (2 லிட்டர்)- $6.00 (வழக்கமான விலை $6.70)
  4. கொக் பிராண்ட் பியூர் கிரவுண்நட் எண்ணெய் (2 லிட்டர்)- $13.15 (வழக்கமான விலை-$14.65)

ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிக பட்சம் ஏதேனும் இரண்டு எண்ணெய் புட்டிகள் வரை இந்த காலகட்டத்தில் வாங்கலாம் என்று ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.