சிங்கப்பூரிலிருந்து வடகொரியாவுக்கு சட்டவிரோத ஏற்றுமதி செய்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரிலிருந்து வடகொரியாவுக்கு சட்டவிரோத ஏற்றுமதி செய்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு

1 mins read
eadfb454-0929-438d-8a5e-cf48b874dcf7
போக்கா சுவைபானங்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்ததற்காக 123 டியூட்டி ப்ரீ என்ற நிறுவனம் மீது ஏற்றுமதி இறக்குமதிச் சட்டத்தின்கீழ் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.   படம்: போக்கா/ஃபேஸ்புக் -

சிங்கப்பூரிலிருந்து வடகொரியாவுக்கு சுவைபானங்களை ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த விற்பனை நிறுவனத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனம் வடகொரியா மீது விதித்த தடைகளுக்கு இணங்க, சிங்கப்பூர் வடகொரியாவுடான எல்லா வர்த்தக உறவுகளை 2017 நவம்பரில் நிறுத்தி லைத்தது.

போக்கா சுவைபானங்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்ததற்காக 123 டியூட்டி ப்ரீ என்ற நிறுவனம் மீது ஏற்றுமதி இறக்குமதிச் சட்டத்தின்கீழ் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சிங்கப்பூரில் பல கடைகளில் கிடைக்கும் போக்கா மில்க் காஃபி, போக்க மெலன் மில்க் போன்ற பானங்களும் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

சுமார் 341,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள், 2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்றுமதி செய்யப்பட்டன.

123 டியூட்டி ஃப்ரீ நிறுவனம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அதிகபட்சம் 100,000 வெள்ளி அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பில் மும்மடங்கு என இரண்டிலும் எது அதிகமோ, அது அபராதமாக விதிக்கப்படலாம்.