அமைச்சு கணிப்பு: 2022ல் 3-5% வளர்ச்சி

உக்ரேன் போர், சீனாவில் தொற்று காரணமாக பொருளியல் 3-4% அளவில் விரிவடைய வாய்ப்புள்ளது

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் இந்த ஆண்­டில் 3 விழுக்­காடு முதல் 5 விழுக்­காடு வரை வள­ரும் என்று வர்த்­தக தொழில் அமைச்சு இப்­போ­தும் கணிக்­கிறது.

ஆனால், உக்­ரேன் போர், சீனா­வில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக இடம்­பெ­றும் முடக்­கம் ஆகி­யவை கார­ண­மாக அந்த வளர்ச்சி, 3% முதல் 4% வரைப்பட்ட அள­வில் இருப்­ப­தற்கு வாய்ப்பு உள்­ள­தாக அமைச்சு எச்­ச­ரித்­துள்­ளது.

உக்­ரேன் போர் கார­ண­மாக பிப்­ர­வரி முதல் உல­கப் பொரு­ளி­யல் சூழல் பாதிக்­கப்­பட்டு வந்­ததை அமைச்சு நேற்று சுட்டிக்­காட்­டி­யது. போர் பிரச்­சினை கார­ண­மாக உல­க­ள­வில் எரி­சக்தி, உணவு, இதர பண்­டகப் பொருள்­க­ளின் விநி­யோகக் கட்­ட­மைப்பு பாதிக்­கப்­பட்டு உள்­ளது.

அவற்­றின் விளை­வாக உல­க­ள­வில் பண­வீக்­கம் கூடி­விட்­டது. பல பொரு­ளியல்­களின் வளர்ச்­சி­யும் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது என்று அமைச்சு நேற்று வெளி­யிட்ட சிங்­கப்­பூர் 2022 முதல் காலாண்டு பொருளி­யல் ஆய்வு அறிக்­கை­யு­டன் வெளி­யி­டப்பட்ட ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்து உள்­ளது.

சீனா­வில் கொவிட்-19 தொற்று பர­வு­வதைத் தடுக்க கடு­மை­யான நட­வ­டிக்கை­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

இதன் கார­ண­மாக அந்த நாட்­டின் பொரு­ளி­ய­லில் தாக்­கம் ஏற்படக்­கூ­டிய நிலை உருவாகி இருக்­கிறது. அதன் விளை­வாக உலகளவில் பொருள் சேவை விநி­யோகத்தில் தேக்­கம் ஏற்­ப­ட­லாம் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

உக்­ரேன் போர் கார­ண­மா­க­வும் சீனா­வில் முடக்­கம் கார­ண­மா­க­வும் உல­க­ள­வில் பொருள் சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்­பில் ஏற்­ப­டக்­கூ­டிய இடை­யூ­று­கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தை­விட கடு­மை­யாக இருக்­கலாம் என்­றும் அவை அதிக காலம் நீடிக்­கக்­கூ­டும் என்­றும் அமைச்சு கூறியது.

அவற்­றின் விளை­வாக அமெ­ரிக்கா, சீனா, ஐரோப்பா உள்­ளிட்ட நாடு­களில் முன்பு கணிக்­கப்­பட்­ட­தை­விட உற்­பத்­தித் துறை மேலும் பாதிக்­கப்­ப­ட­லாம். மொத்த உள்­நாட்டு உற்­பத்தி குறை­ய­லாம் என்­பதை­யும் அமைச்சு சுட்­டி­யுள்­ளது.

இத­னி­டையே, உல­கப் பொரு­ளி­யல் நில­வ­ரம் பற்றி கருத்­து­ரைத்த வர்த்­தக தொழில் அமைச்­சுக்­கான நிரந்­த­ரச் செய­லா­ளர் கேப்­ரி­யல் லிம், உல­கப் பொரு­ளியல் கீழே இறங்­கு­மு­க­மா­கக்­கூ­டிய ஆபத்­து­கள் கணி­ச­மான அள­வுக்கு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

உக்­ரேன்-ரஷ்ய போர் மேலும் கடு­மை­யா­வது; எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தை­விட அதி­க­மாக உல­க­ள­வில் பொருள் சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­வது; நிதித்­துறை நிலைப்­பாட்­டிற்­கான ஆபத்­து­கள் ஆகி­யவை இவற்றுக்கான அம்­சங்­களில் உள்­ள­டங்­கும் என்றாரவர்.

மொத்­த­மாக ஒப்­பிட்டுப் பார்க்­கை­யில், சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லுக்­கான புறத்­தேவை வாய்ப்பு மூன்று மாதத்­திற்கு முன்பு இருந்­ததை­விட இப்­போது பல­வீ­ன­ம­டைந்து உள்ளது என்­பதே அமைச்­சின் மதிப்­பீடு.

இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சூழ்­நிலை கட்­டுக்­குள் வந்து­விட்­டதை அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது.

இதன்­ வி­ளை­வாக எல்­லை­கள் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட வேக­மாக திறக்­கப்­பட்டன. சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லின் சில துறை­க­ளின் வளர்ச்சி வாய்ப்­பு­கள் வலு­வாக இருப்­பதையும் காண­மு­டி­கிறது.

2022 முதல் காலாண்­டில் பொரு­ளி­யல் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 3.7% வளர்ச்சி அடைந்துள்ளது என்­பதை ஆய்வு சுட்­டி­யது. இந்த வளர்ச்சி 3.4%தான் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இவ்­வே­ளை­யில், நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், சிங்­கப்­பூர் வெள்ளி மதிப்பு உயர்­வ­தற்கு வகை செய்­யும் இந்த ஆணை­யத்­தின் கொள்கை, பண­வீக்­கத்­துக்கு எதி­ரான போராட்­டத்­தில் உத­வக்­கூ­டிய, ஏற்­பு­டைய ஒன்­றாக இருக்­கிறது என்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!