எம்ஆர்டி ரயிலில் மின்தேக்கியில் தீ; யாருக்கும் காயமில்லை

எம்­ஆர்டி ரயில் ஒன்­றில் மின்­தேக்கி சாதனம் கடந்த செவ்­வாய்க்­கிழமை திடீ­ரென தீப்­பி­டித்­துக்கொண்­டது.

இத­னால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக சோமர்­செட் ரயில் நிலை­யத்­தில் பய­ணி­கள் ரயில் வண்­டி­யை­விட்டு கீழே இறங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அந்­தத் தீ விபத்து பற்றி நேற்று எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

வடக்கு-தெற்கு வழித்­த­டத்­தில் வடக்கு நோக்கி சென்ற ரயி­லில் செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் சுமார் 12.10 மணிக்கு அந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக அறிக்கை தெரி­வித்­தது. பயணி ஒரு­வர் உட­ன­டி­யாக தீயை அணைத்­து­விட்­ட­தாக 'எஸ்எம்­ஆர்டி டிரெ­யின்ஸ்' நிறு­வனத்­தின் தலை­வர் லாம் ஷெவ் காய் கூறி­னார்.

எஸ்­எம்­ஆர்டி ஊழி­யர்­கள் அந்த இடத்­தில் இருந்து உத­வி­னார்­கள். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக சோமர்­செட் நிலையத்­தில் பயணிகள் அனை­வ­ரும் ரயி­லில் இருந்து தரை ­இ­றங்­கி­னர்.

பய­ணி­கள் யாருக்­கும் மருத்­துவ உதவி எது­வும் தேவைப்­ப­ட­வில்லை என்­றும் திரு லாம் மேலும் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, ஃபேஸ்புக்­கில் வெளி­யான ஒரு காணொ­ளியைப் பார்க்­கை­யில், பய­ணி­கள் ரயி­லில் இருந்து வெளி­யே­று­வ­தைக் காண முடிந்­தது.

சிலர் தங்­க­ளு­டைய வாயை மூடி­ய­படி வெளியே வந்­தார்­கள். அவர்­க­ளைச் சூழ்ந்து புகை காணப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட ரயில் வண்டி பணி­ம­னைக்குப் பரி­சோ­த­னைக்காக கொண்டு செல்­லப்­பட்­ட­தாக அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

இந்த விபத்து தொடர்­பில் பொது போக்­கு­வ­ரத்து பாது­காப்பு தள­பத்­தி­யம் நடத்­தும் புலன்­வி­சா­ர­ணை­யில் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் உதவும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!