பூன் லே தாக்குதல்: சந்தேக நபரின் பிணைத் தொகையைக் குறைக்கும் கோரிக்கை நிராகரிப்பு

பூன் லே தாக்குதல்: சந்தேக நபரின் பிணைத் தொகையைக் குறைக்கும் கோரிக்கை நிராகரிப்பு

1 mins read
4fe329ba-b28c-486e-a28b-efced61f0c68
படம்: James/Roads.SG/Facebook, Jalaluddin Akbar/ Facebook -
Google News Preferred Icon

பூன் லே வட்டாரத்தில் ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நம்­பப்­படும் ஒருவர் தம்முடைய பிணைத் தொகையைக் குறைக்குமாறு முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ளது. சிறுவர் சட்டத்தின் கீழ் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதால், அந்த 20 வயது நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன் குண்டர் கும்பலில் சேரும்போது அவருக்கு 14 வயது.

இந்த வழக்கில் சந்தேக நபர்களைப் பிரதிநிதிக்கும் வடி பிவிஎஸ்எஸ், சந்தேக நபரின் பிணைத் தொகையை $40,000த்திலிருந்து $15,000க்குக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சந்தேக நபரின் குடும்பச் சூழ்நிலை மோசமாக இருப்பதாகவும், அவருடைய மனைவி, மகள் ஆகியோருக்கு உடல்நலம் சரி இல்லையென்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இதை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என மாவட்ட நீதிபதி டெரன்ஸ் டெ சொன்னார்.

குற்றஞ்சாட்டப்பட்ட மாற்றொருவரான 20 வயது முகம்மது சஜித் சலீமுக்குப் பிணை கொடுக்கப்படவில்லை.

வழக்கு ஜூன் 23ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.