யூனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரின் புதிய அம்சமாக மிளிர இருக்கும் 'மினியன் லேண்ட்'

யூனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரின் புதிய அம்சமாக மிளிர இருக்கும் 'மினியன் லேண்ட்'

1 mins read
eb591863-f684-4ddc-a8d9-5e19bd7de2b6
அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் (நடுவில்). படம்: ரிசோர்ட்ஸ் வொர்ல்டு செந்தோசா -

யூனி­வர்­சல் ஸ்டூ­டி­யோஸ் சிங்­கப்­பூ­ரின் புதிய அம்­ச­மான மினி­யன் லேண்ட்டை அமைப்­ப­தற்­கான

கட்­டு­மா­னப் பணி­கள் நேற்று தொடங்­கின.

சிங்­கப்­பூ­ரின் சுற்­றுப்­ப­ய­ணத் துறையை மீண்­டும் உயிர்ப்­பிக்க மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று.

'டெஸ்­பிக்­க­பல் மீ' திரைப்­ப­டங்­களில் வரும் மினி­யன்ஸ் கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கரு­ப்பொ­ரு­ளா­கக் கொண்டு இந்­தப் புதிய அம்­சம் அமைக்­கப்­ப­டு­கிறது.

2024ஆம் ஆண்­டில் இது திறக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முன்பு இருந்த மட­காஸ்­கார் தளத்­துக்­குப் பதி­லாக இந்த மினி­யன் லேண்ட் இடம்­பெ­றும்.

நேற்று நடை­பெற்ற அடிக்­கல் நாட்டு விழா­வில் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் கலந்­து­கொண்­டார்.

"கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்பு ஓர் ஆண்­டுக்கு நான்கு மில்­லி­யன் பேர் வருகை அளித்­த­னர்.

"தற்­போது பய­ணக் கட்­டுப்­பாட்­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் செந்­தோ­சா­வில் உள்ள யூனி­வர்­சல் ஸ்டூ­டி­யோ­சுக்­கும் மினி­யன் லேண்ட்­டுக்­கும் மேலும் பலர் வரு­வார்­கள் என நம்­பு­கி­றேன்," என்று திரு டான் தெரி­வித்­தார்.

புதிய வரவான மினி­யன் லேண்ட்­டுக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் நீடித்த நிலைத்­தன்மை திட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு மேற்­கொள்­ளப்­படும் என்று தெரி­விக்­கப்

பட்­டது.