ஈஸ்வரன்: நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் சிங்கப்பூரின் பங்களிப்பு அதிகரிக்கும்

ஈஸ்வரன்: நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் சிங்கப்பூரின் பங்களிப்பு அதிகரிக்கும்

2 mins read
85a74858-a828-48a8-bc7f-bfe9cdc8af95
-

விமா­னத் துறை, கடற்­துறை, வர்த்­தகம் ஆகி­ய­வற்­றுக்­கான மைய­மாக விளங்­கும் சிங்­கப்­பூர் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்க கூடு­தல் பங்­க­ளிக்­க­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால்­தான் சிங்­கப்­பூர்

பசு­மைத் திட்­டம் 2030ன்கீழ் தேசிய அள­வி­லான இலக்கை சிங்­கப்­பூர் நிர்­ண­யித்­துள்­ள­போ­தி­லும் மற்ற நாடு­க­ளு­டன் அது பங்­கா­ளித்­துவ உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தாகப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர்

எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

டென்­மார்க், இந்­தியா, இத்­தாலி ஜப்­பான் நார்வே, சுவீ­டன், பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளு­டன் இணைந்து ஃபர்ஸ்ட் மூவர்ஸ் கூட்­ட­ணி­யில் சிங்­கப்­பூர் இணைந்­துள்­ள­தாக உல­கப் பொரு­ளி­யல் கருத்­த­ரங்­கில் திரு ஈஸ்­வ­ரன் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தார்.

இந்­தக் கூட்­ட­ணி­யில் 50க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் இடம்­பெ­று­கின்­றன.

இக்­கூட்­ட­ணி­யைக் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் நடை­பெற்ற COP26 பரு­வ­நிலை மாற்­றம் மாநாட்­டில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் தொடங்கி வைத்­தார்.

புத்­தாக்­க­மிக்க தூய எரி­சக்தி தொழில்­நுட்­பத்­துக்­கான தேவை­களை அதி­க­ரிப்­பதே கூட்­ட­ணி­யின் நோக்­க­மா­கும்.

"இந்­தக் கூட்­ட­ணி­யில் இணைய சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. இது சிங்­கப்­பூ­ருக்­குக் கிடைத்­துள்ள கௌர­வம். விமா­னத் துறை, கடற்­துறை, வர்த்­த­கம் ஆகி­ய­வற்­றின் மைய­மாக நாங்­கள் திகழ்­வ­தால் இதில் எங்­க­ளால் பங்­க­ளிக்க முடி­யும். எனவே, அழைப்பை ஏற்­றுக்­கொண்­டோம்," என்று வர்த்­தக உற­வு­க­ளுக்­குத் தலைமை தாங்­கும் அமைச்­ச­ரு­மான திரு

ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

தனி­யார் துறை­யு­டன் ஒன்­றி­ணைந்து செயல்­படும் பழக்­கம் சிங்­கப்­பூ­ருக்கு இருப்­ப­தா­க­வும் இதன்­மூ­லம் அதிக பங்­க­ளிக்க முடி­யும் என்­றும் திரு ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் தொடங்­கிய சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030ன்கீழ், நீடித்த நிலைத்­தன்மை தொடர்­பான புதிய தீர்­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தில் ஆசி­யா­வின் வட்­டார மைய­மா­கத் திகழ சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

"சிங்­கப்­பூ­ரால் பங்­க­ளிக்க முடி­யும் என்ற அங்­கீ­கா­ரம் இருப்­பது தெள்­ளத் தெளி­வா­கத் தெரி­கிறது," என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளு­டன் பேசி கூட்­ட­ணி­யில் சேர அவற்றை அர­சாங்­கம் ஊக்­கு­விக்­கும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று தெரி­வித்­தது.