$273.89 மி.க்கு விற்பனையான லேக்சைட் அபார்ட்மெண்ட்ஸ்

ஒட்டுமொத்த விற்பனைத் திட்டத்தின்கீழ் லேக்­சைட் அபார்ட்­மெண்ட்ஸ் கொண்­டோ­மி­னி­யம் $273.89 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டுள்­ளது. இது குடி­யி­ருப்­பா­ளர்­க­ளால் எதிர்­பார்க்­கப்­பட்ட $240 மில்­லி­ய­னை­விட 14 விழுக்­காடு அதி­கம். 9E, 9F யுவான் சிங் சாலை­யில் உள்ள இந்­தத் குடி­யி­ருப்பு மேற்­கொண்ட இரண்­டா­வது ஒட்டுமொத்த விற்­பனை முயற்சி வெற்றி கண்­டுள்­ளது.

ஜூரோங் லேக் கார்­டன்ஸ் மற்­றும் ஜூரோங் ஏரி வட்­டா­ரத்­துக்கு அரு­கில் உள்ள இந்த 12 வீடு­க­ளைக் கொண்ட குடி­யி­ருப்பு 99 ஆண்­டு­கள் குத்­த­கைக்­கா­லத்­தைக் கொண்­டுள்­ளது.

45 ஆண்­டு­கள் குத்­த­கைக்­கா­லம் எஞ்­சி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த விங் டாய் ஹோல்­டிங்­சின் துணை நிறு­வ­ன­மான வின்­வில் இன்­வெஸ்ட்­மெண்ட் நிறு­வ­னத்­தி­டம் லேக்சைட் அபார்ட்­மெண்ட்ஸ் விற்­கப்­பட்­டுள்­ளது.

லேக்­சைட் அபார்ட்­மெண்ட்ஸ் குடி­யி­ருப்பு அமைந்­துள்ள இடத்­தின் பரப்­ப­ளவு 12,465.4 சதுர மீட்­ட­ரா­கும். அந்த நிலத்­தில் 300க்கும் அதி­க­மான வீடு­க­ளைக் கொண்ட குடி­யி­ருப்­பைக் கட்ட வின்­வில் இன்­வெஸ்ட்­மெண்ட் திட்­ட­மிட்­டுள்­ளது.

அந்த வீடு­க­ளி­லி­ருந்து பார்க்­கும்­போது ஜூரோங் லேக் கார்­டன்ஸ், சைனிஸ் கார்டன்ஸ், ஜப்பனிஸ் கார்டன்ஸ் ஆகி­யவை தெரி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தற்­போ­துள்ள லேக்­சைட் அபார்ட்­மெண்ட்ஸ் குடி­யி­ருப்­பில் இருக்­கும் மூன்று படுக்­கை­யறை வீடு­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்­குத் தலா ஏறத்­தாழ $2.28 மில்­லி­யன் கிடைக்க இருப்­ப­தாக சொத்து முக­வை­யான பிரோப்­நெக்ஸ் கூறி­யது.

இரண்­டா­வது மத்­திய வர்த்­தக வட்­டா­ர­மாக அமைக்­கப்­பட இருக்­கும் ஜூரோங் லேக் வட்­டா­ரத்­தில் லேக்­சைட் அபார்ட்­மெண்ட்ஸ் குடி­யி­ருப்பு இருக்­கிறது.

புதி­தாக அமைக்­கப்­பட இருக்­கும் ஜூரோங் புத்­தாக்க வட்­டா­ரத்தை கார் மூலம் பத்து நிமி­டங்­களில் அடைந்­து­வி­ட­லாம். அது­மட்­டு­மின்றி, அவ்­வி­டம் லேக்­சைட் எம்­ஆர்டி நிலை­யம் அரு­கில் உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!