100,000 சிங்கப்பூரர்களின் மரபணுத் தகவல் ஆய்வு

நோயா­ளி­யின் மர­பி­யல், சுற்­றுச்­சூழல், வாழ்க்கை முறை ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் அவ­ருக்கு உகந்­த­தா­கப் பரிந்­து­ரைக்­கப்­படும் மருந்து ‘பிரி­சி­ஷன் மெடி­சின்’ எனப்­படும்.

புற்­று­நோய், நாள்­பட்ட நோய்­கள் போன்­ற­வற்­றிற்­கான மூல கார­ணத்­தைக் கண்­ட­றி­ய­வும், நோயைத் தடுக்­கும் முறை­களை அடை­யா­ளம் காண­வும் மர­ப­ணுத் தக­வல்­கள் பெரி­தும் உத­வும்.

இவற்­றைக் கருத்­தில்­கொண்டு அடுத்த மூன்று ஆண்­டு­களில் ஆரோக்­கி­ய­மான 100,000 சிங்­கப்­பூ­ரர்­க­ளின் முழு­மை­யான மர­ப­ணுத் தக­வல்­கள் சேக­ரிக்­கப்­பட இருக்­கின்­றன.

30 வய­துக்­கும் 80 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­க­ளின் மர­ப­ணுத் தக­வல்­கள் இவ்­வாறு சேக­ரிக்­கப்­படும்.

‘புரோ­ஜெக்ட் எஸ்ஜி100கே’ எனப்­படும் இத்­திட்­டத்­தின்கீழ் திரட்­டப்­படும் மர­ப­ணுத் தக­வல்­க­ளின் தரவு­த­ளம் ஆசி­யா­வின் ஆகப் பெரிய இத்­த­கைய தக­வல் தளங்­களில் ஒன்­றாக விளங்­கும்.

இந்­தத் திட்­டத்­தின் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் ‘பிரி­சைஸ்’ ஆய்வு நிறு­வ­ன­மும் மர­ப­ணுத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ‘இல்­லு­மினா’வும் நேற்று பங்­கா­ளித்­துவ உடன்­ப­டிக்­கை­யில் கையெ­ழுத்­திட்­டன.

கையெ­ழுத்து நிகழ்ச்­சி­யில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கலந்­து­கொண்­டார்.

மர­ப­ணுத் தக­வல் திரட்­டப்­படும் 100,000 பேரில் 40 விழுக்­காட்­டி­னர் மலாய், இந்­திய இனத்­த­வர்­க­ளா­க­வும் எஞ்­சி­யோர் சீனர்­க­ளா­க­வும் இருப்­பர்.

தற்­போது இத்­திட்­டத்­தில் 70,000 பேர் பதிந்­து­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் வாரத்­துக்கு 300 பேர் என்ற அடிப்­படை­யில் விரை­வில் எஞ்­சிய 30,000 பேரும் திட்­டத்­தில் சேர்க்­கப்­ப­டு­வர் என்­றும் திரு ஹெங் கூறி­னார்.

திட்­டத்­தில் பங்­கேற்­போ­ரின் ரத்த மாதி­ரி­கள் முழு­மை­யான மர­பணு வரி­சைப்­ப­டுத்­த­லுக்கு அனுப்­பப்­படும்.

அவர்­க­ளின் ரத்த சர்க்­கரை அளவு, ரத்­தக் கொழுப்பு அளவு போன்­ற­வற்­றுக்­கான சோத­னை­க­ளு­டன் உட­லு­று­திச் சோத­னை­யும் நடத்­தப்­படும்.

வாழ்க்­கை­முறை பற்­றிய கேள்­வி­க­ளுக்­கும் அவர்­கள் பதி­ல­ளிப்­பர்.

இந்­தத் தக­வல்­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தன் மூலம் சரி­யான சிகிச்சை முறை­யைத் தேர்ந்­தெ­டுப்­ப­தும் குறிப்­பிட்ட அள­வில் மருந்து­க­ளைத் தரு­வ­தன் மூலம் அவற்­றின் செயல்­தி­றனை அதி­க­ரிப்­ப­தும் சாத்­தி­ய­மா­கும் என்­றார் துணைப் பிர­த­மர்.

புதிய வேலை­வாய்ப்­பு­கள், புதிய நிறுவனங்கள், மேலும் துல்­லி­ய­மான கரு­வி­கள், மருந்­து­கள், தரவு ஆய்வு ஆகி­ய­வற்­றின் மூலம் ‘புரோ­ஜெக்ட் எஸ்ஜி100கே’ திட்­டம் சிங்­கப்­பூ­ரின் உயிர்­ம­ருத்­து­வத் துறையை வலுப்­ப­டுத்த உத­வும் என்று கரு­தப்­படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!