காவல்துறையினரால் சுடப்பட்ட ஆடவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

கிள­மெண்டி காவல் பிரிவு அலு­வ­லக வளா­கத்­துக்கு அருகே கடந்த பிப்­ர­வரி மாதம் 17ஆம் தேதி காவல்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் மோத­லில் ஈடு­பட்ட சூ சியோ வீ மீது நேற்று கூடு­தல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

2019 ஜூன் 9ஆம் தேதி மாலை ஆறே முக்­கால் மணி­ய­ள­வில் ‘ஏட்­டோஸ்’ அதி­கா­ரி­யின் இடது நெற்­றிப் பொட்­டில் சூ குத்­தி­ய­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

கம்­போங் ஜாவா அக்­கம்­பக்­கக் காவல் நிலை­யத்­துக்கு அருகே நடந்த சம்­ப­வம் குறித்த மேல் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

குடும்ப வன்­முறை தொடர்­பில் மாது ஒரு­வ­ருக்கு ஆத­ர­வா­கப் பிறப்­பிக்­கப்­பட்ட தனி­ந­பர் பாது­காப்­பு ஆணையைச் சென்ற ஆண்டு செப்­டம்­பர் 16ஆம் தேதி மீறி­ய­தாக சூ மீது மேலும் ஒரு குற்­றம்­சாட்­டப்­பட்­டது. சூ அந்த மாது மீது ‘ஏரோ­சால்’ குவ­ளையை வீசி­யதாகக் கூறப்­பட்­டது. அதே சம்­ப­வத்­தின் தொடர்­பில் ஆபத்து விளை­விக்­கும் செய­லில் ஈடு­பட்­ட­தா­க­வும் அவர் மீது மூன்­றா­வது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

கிள­மெண்டி அவென்யூ 5ல் இந்த ஆண்டு பிப்­ர­வரி 17ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­தில் சூவின் இடது கையில் அதி­கா­ரி­கள் சுட நேர்ந்­தது. கையில் கத்­தி­யு­டன் அதி­காரி ஒரு­வரை அவர் தாக்க முற்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. அதற்­குச் சற்­று­நே­ரம் முன்­பாக கிள­மெண்டி அவென்யூ 1ல் 41 வயது மாதை நோக்கி அவர் கத்­தியை வீசி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

கத்­தியை வீசி­யது நிரூ­பிக்­கப்­பட்­டால் சூவிற்கு ஏழாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் அப­ரா­தமோ பிரம்­ப­டியோ விதிக்­கப்­ப­ட­லாம்.

பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த அர­சாங்க அதி­கா­ரியை வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­திய குற்­றத்­துக்கு ஏழாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி ஆகி­யவை விதிக்­கப்­ப­ட­லாம்.

தனி­ந­பர் பாது­காப்­பு ஆணையை மீறியதற்கு ஈரா­யி­ரம் வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ ஆறு மாதம் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!