தட்டு கழுவ $3,500 சம்பளம்: தட்டிக்கழிக்கும் சிங்கப்பூரர்கள்

தட்டு கழுவ $3,500 சம்பளம்: தட்டிக்கழிக்கும் சிங்கப்பூரர்கள்

1 mins read
63963429-759b-484f-ac0d-d5ba8caf9455
தட்டு கழுவும் இயந்திரத்தில் தட்டுகள் அடுக்கப்படுகின்றன (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகம் தட்டு கழுவ $3,500 மாதச் சம்பளம் அளிக்கிறது.

வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், சம்பளத்தை உயர்த்த வேண்டியிருந்தது. சம்பளத்தை அதிகரித்த பிறகும், வேலைக்கு ஆள் அமர்த்த ஒரு மாதம் மேல் எடுத்ததாகக் கூறப்பட்டது.

பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் தட்டு கழுவும் வேலை பார்க்க முன்வருவதில்லை. இதனால் வெளிநாட்டு ஊழியர்களே இந்த வேலையைப் அதிகமாக செய்கின்றனர்.

கொவிட்-19 சூழ்நிலையால் பல மலேசியர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். இதோடு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையும் சிங்கப்பூர் அரசாங்கம் முடக்கியது. இதனால் உணவு, பானத்துறை நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேட திண்டாடுகின்றனர்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க சில உணவகங்கள் தட்டு கழுவும் பணியை மற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றன.

எட்டு மணி நேரம் தட்டு கழுவ, இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் $3,800லிருந்து $4,000 மாதச் சம்பளம் அளிக்கின்றன.