'உடல்நலமில்லை என்றால் முகக்கவசம் அணிய வேண்டும்'

'உடல்நலமில்லை என்றால் முகக்கவசம் அணிய வேண்டும்'

1 mins read
b32b8cc4-17a5-4420-a539-e5ae460633cb
-

கொவிட்-19 பெருந்­தொற்று முடி­வடைந்து விட்­டா­லும் உடல்­ந­ல­மில்லை என்­றால் சிங்­கப்­பூ­ரர்­கள் தொடர்ந்து முகக்­க­வ­சம் அணிந்து­கொள்ள வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

2019க்குப் பிறகு ஜப்­பா­னுக்­குச் சென்­றி­ருக்­கும் திரு லீ, ஜப்­பா­னி­யர்­க­ளி­டம் மிக மிக நல்ல பழக்­கம் இருப்­ப­தைச் சுட்­டி­னார்.

கொவிட்-19 காலத்­துக்கு முன்­பி­ருந்தே ஜப்­பா­னி­யர் தங்­க­ளுக்கு உடல்­ந­ல­மில்லை என்­றால் வெளியே செல்­லும்­போது, மற்­ற­வர்­களை நோயி­லி­ருந்து பாது­காக்­கும் வித­மாக முகக்­க­வ­சம் அணிந்­து­தான் செல்­வார்­கள் என்­றார்.

"பெருந்­தொற்றுக் காலத்­தின்­போது முகக்­க­வ­சம் அணி­யா­மல் செல்­லும் ஜப்­பா­னி­யர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எது­வும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. கார­ணம் அவர்­கள் தனது மற்­றும் பிற­ரின் பாது­காப்­பைக் கருத்­தில் கொண்டு முகக்­க­வ­சத்தை தானாக அணிந்துகொள்­வார்­கள். இந்த அரிய பண்பை நாம் கற்­றுக்­கொள்ள வேண்­டும்.

"சிங்­கப்­பூ­ரில், கொவிட்-19 பெருந்­தொற்­றுக்குப் பிறகு வெளிப்­பு­றத்­தில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மல்ல என்று அறி­விக்­கப்­பட்­டா­லும், உங்­க­ளுக்கு உடல்­ந­ல­மில்லை என்­றால் வெளியே செல்­லும்­போது முகக்­க­வ­சம் அணிந்து செல்­லுங்­கள். முகக்­க­வ­சம் அணி­யும் பழக்­கத்தை நாம் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளா­கக் கடைப்­பி­டித்து வரு­வ­தால், இது நமக்­குப் புதி­தல்ல," என்று திரு லீ விளக்­கி­னார்.