நன்கொடை அமைப்புகளுக்கு விலைக்கழிவுகள் வழங்கும் புதிய பங்காளித்துவ உடன்பாடு

நன்கொடை அமைப்புகளுக்கு விலைக்கழிவுகள் வழங்கும் புதிய பங்காளித்துவ உடன்பாடு

2 mins read
1a7d93ac-42ab-410c-a23b-e14774a41a04
-

நன்­கொடை அமைப்­பு­களும் எஸ்ஜி கேர்ஸ் தொண்­டூ­ழிய நிலை­யங்­களும் தங்­கள் பய­னா­ளர்­க­ளுக்­காக ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­யில் வாங்­கும் அத்­தி­யா­வ­சிய உணவு மற்­றும் வீட்டு உப­யோ­கப் பொருள்­க­ளுக்கு விலைக்கழிவு பெறும்.

இந்­தத் தொண்­டூ­ழிய நிலை­யங்­களும் சமூகப் பங்­கா­ளி­களும் ஃபேர்பி­ரைஸ் சின்­ன­மிட்ட பொருள்­களைப் பத்து காசு வரை­யி­லான விலைக்கழி­வில் வாங்­கிக்­கொள்­ள­லாம்.

இதன் தொடர்­பான புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில், கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சின் எஸ்ஜி கேர்ஸ் அலு­வ­ல­க­மும் ஃபேர்பி­ரைஸ் குழு­ம­மும் நேற்று கையெ­ழுத்­திட்­டன.

உல­க­ளா­விய அதிர்ச்­சி­கள் மற்­றும் உக்­ரேன் மீதான ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் பய­னீட்­டா­ளர் விலை­கள் அண்­மைய மாதங்­களில் உயர்ந்­துள்­ள­தால், பண­வீக்­கம் 10 ஆண்டு ­களில் இல்­லாத அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது.

உடன்­பாடு கையெ­ழுத்­தி­டும் சடங்­கில் பேசிய கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், "தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் அத்­தி­யா­வ­சி­ய­மான உணவு மற்­றும் வீட்­டுப் பொருள்­களை வாங்­கு­வ­தில் அதிக பாதிப்­புக்­குள்­ளா­கக்­கூ­டிய குடும்­பங்­க­ளுக்­கும் அவர்­க­ளுக்கு சேவை­ய­ளிக்­கும் சமூக அமைப்­பு­க­ளுக்­கும் பெரும் சவா­லாக உள்­ளது," என்­றார்.

"இச்­ச­லுகை மூலம் தனது சங்­கம் சேவை­யாற்­றும் சுமார் 50 பய­னா­ளர்­க­ளுக்கு உணவு மற்­றும் அத்­தி­யா­வ­சிய பொருள்­களை வாங்­கும்­போது, அதி­லி­ருந்து சிறிய அளவு பணத்தை சேமிக்க முடி­யும். அதை கொண்டு மேலும் சில பய­னா­ளர்­களுக்குச் சில­வற்றை வாங்­க­லாம்," என்­றார் ஐக்­கிய இந்­திய முஸ்­லிம் சங்­கத்­தின் செயல்­பாட்டு நிர்­வாகி திரு முக­மது ஹபிப்.

நிபு­ணத்­துவ பொறி­யா­ளர்­க­ளின் உத­வி­யோடு பய­னா­ளர்­க­ளின் இடங்­களில் மின்­தூக்­கிப் பாது­காப்பு, மின்­சார இணைப்பு, தண்­ணீர்க் குழாய் பழு­து­பார்ப்பு போன்ற பணி­களைக் கட்­ட­ணம் வசூ­லிக்­கா­மல் செய்­வ­தற்­கும், எஸ்ஜி கேர்ஸ் தொண்­டூ­ழிய நிலை­யங்­களும் நன்­கொடை அமைப்பு­களும் நிபு­ணத்­துவ பொறி­யா­ளர் அமைப்­பு­டன் இணைந்து பணி­யாற்றும்.