ஜப்பான் சுற்றுப்பயணங்களுக்கு அதிகமானோர் பதிவு

ஜப்பான் சுற்றுப்பயணங்களுக்கு அதிகமானோர் பதிவு

2 mins read
1e5e3eb2-0ee5-4c7b-b75e-abcb7a49a8c4
-

ஜூன் 10ஆம் தேதி முதல் 36 நாடு­க­ளைச் சேர்ந்த சுற்­றுப்பய­ணி­க­ளுக்கு தனது எல்லைகள் திறக்கப்படும் என்று ஜப்­பான் நேற்று முன்­தி­னம் அறி­வித்­துள்ள நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் உள்ள பயண ஆர்­வ­லர்­கள் மற்­றும் தொழில்­துறை­யி­னர் அங்கு ஓய்வுப் பய­ணத்­திற்­கான திட்­டங்­க­ளைத் தயா­ரித்து வரு­கின்­ற­னர்.

மே 21, 22 தேதி­களில், இயூ ஹாலி­டேஸ் பயண நிறு­வ­னம் நடத்­திய ஜப்­பான் பய­ணக் கண்­காட்­சிக்கு வரு­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பெரும் வர­வேற்பு கிடைத்­தது.

200க்கும் மேற்­பட்­டோர் முன்­பதிவு செய்­துள்­ள­தா­க­வும் அவர்­களில் பெரும்­பான்­மை­யோர் குடும்­பங்­க­ளா­கப் பதிந்­து­கொண்­டுள்­ள­னர் என்­றும் இயூ ஹாலி­டேஸ் நிறு­வன இயக்­கு­நர் ஃபியோனா மா கூறி­னார்.

"ஆகப் பெரிய குடும்­ப­மாக 15 பேர் பய­ணத்­துக்­குப் பதிந்­து­கொண்­ட­னர். சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் முன்­கூட்­டியே பய­ணங்­க­ளுக்­குப் பதிவு செய்து கொண்­டுள்­ள­னர். ஆண்­டி­று­தி­யில் பய­ணக் கட்­ட­ணம் அதி­க­ரித்­து­வி­டும் என்று அவர்­கள் அச்­சப்­ப­டு­வதே அதற்கு கார­ணம்," என்­றும் திரு­வாட்டி மா சொன்­னார்.

ஜப்­பா­னின் இந்த அறி­விப்­புக்கு முன்­ன­தாக இயூ ஹாலி­டேஸ் பயண நிறு­வ­னம், ஜூன் மாதத்­துக்கு எந்தப் பய­ணத்­துக்­கும் ஏற்­பாடு செய்­ய­வில்லை. ஆனால், இப்­போது வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் அடுத்த மாதம் முடி­வில் ஜப்­பா­னுக்­குப் பய­ணம் மேற்­கொள்ள விரும்­பு­வ­தால், அந்­நி­று­வ­னம் பய­ணங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்து வரு­கிறது.

இம்­மா­தம் 17ஆம் தேதி­யன்று அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, தாய்­லாந்து, சிங்­கப்­பூர் ஆகிய நாடு­களில் இருந்து வெளி­நாட்டுச் சுற்­று­லாப் பய­ணி­கள் சோத­னைத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக சிறிய குழு­வாக சுற்­றுப்­ப­ய­ணங்­களில் ஈடு­பட அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று ஜப்­பான் சுற்­றுலா வாரி­யம் அறி­வித்­தது. ஆனால், ஒரு குழு­வில் அனு­ம­திக்­கப்­பட்ட நபர்­க­ளின் எண்­ணிக்­கையை அது குறிப்­பி­ட­வில்லை.

மற்ற பயண நிறு­வ­னங்­க­ளின் மூன்று பிர­தி­நி­தி­கள் உட்­பட மொத்­தம் நான்கு சிங்­கப்­பூ­ரர்­கள் மே 26 முதல் 30ஆம் தேதி வரை இந்தப் பயணத்தில் இடம்பெறுவர் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

சிங்­கப்­பூர் தவிர, குழுப் பய­ணங்­களை நடத்த அனு­ம­திக்­கப்­பட்ட மற்ற மூன்று நாடு­களும் சோதனைப் பய­ணத்­தில் ஈடு­பட்­டுள்­ளன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.