விமானப் போக்குவரத்துத் துறையில் கொவிட்-19க்கு முந்தைய நிலையின் 90% ஊழியர்கள் இணைவர்

விமானப் போக்குவரத்துத் துறையில் கொவிட்-19க்கு முந்தைய நிலையின் 90% ஊழியர்கள் இணைவர்

2 mins read
9de24ab1-ec73-42d2-9f3e-8f4b1009e8ef
-

ஆண்­டி­று­திக்­குள் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு முந்­தைய நிலை­யின் 85 முதல் 90% ஊழி­யர்­கள் மீண்­டும் இணை­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கொள்­ளை­நோ­யின்­போது 35,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களை இத்­துறை இழந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மீண்­டு­வ­ரும் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறைக்கு ஊழி­யர்­களை ஈர்க்­கும் ஆள்­சேர்ப்பு இயக்­கத்­தைத் துறை தொடங்­கி­விட்­டது என்­றும் இது மாதக்­க­ணக்­கில் தொட­ரும் என்­றும் போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நேற்று கூறி­னார்.

அவர் கலந்­து­கொண்டு பேசி­யி­ருந்த 'ஒன்­ஏ­வி­யே­ஷன் கரி­யர்ஸ்' வேலைச் சந்­தை­யி­லேயே கிட்­டத்­தட்ட 2,000 பேர் வேலை­யில் அமர்த்­தப்­ப­டு­வர் என்று குறிப்­பிட்­டார் அவர்.

"விமா­னப் பய­ணங்­களும் பய­ணத்­து­றை­யும் மீண்­டு­வ­ரு­வ­தற்கு இத்­து­றை­யின் மனி­த­வ­ளம் ஈடு­கொ­டுக்க வேண்­டும். அதை நாம் உறு­தி­செய்ய வேண்­டும்," என்­றார் திரு சீ. தங்­க­ளி­டம் கிட்­டத்­தட்ட 6,600க்கும் மேற்­பட்ட வேலை­கள் நிரப்­பப்­ப­டா­மல் உள்­ள­தாக சாங்கி விமான நிலை­யக் குழு­ம­மும் அதன் விமான நிலைய பங்­கா­ளி­களும் தெரி­வித்­துள்­ளன.

செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பர், காசா­ளர், துணை காவல்­துறை அதி­காரி, சமை­யல்­கா­ரர், துப்­பு­ர­வா­ளர், வர்த்­தக மற்­றும் தரவு ஆய்­வா­ளர் எனப் பல­த­ரப்­பட்ட வேலை­க­ளுக்­கான விளம்­ப­ரங்­கள் இந்த வேலைச் சந்­தை­யில் இடம்­பெற்­றுள்­ளன.

விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை தன்னை மாற்­றங்­க­ளு­டன் மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தா­க­வும் நீடித்த நிலைத்­தன்­மை­யி­லும் மின்­னி­லக்­க­ம­யத்­தி­லும் துறை கவ­னம் செலுத்தி வரு­வ­தா­க­வும் சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் தலைமை இயக்­கு­நர் ஹான் கோக் ஜுவான் கூறி­னார். சரி­யான நபர்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தால் இந்த வளர்ச்­சி­யைத் துறை சிறப்­பா­கக் கையா­ளும் என்­றும் புதிய வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"ஒட்­டு­மொத்த விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறையை ஒன்­றி­ணைத்­துக் கொண்­டு­வ­ரும் இந்த வேலைச் சந்தை மிக­வும் முக்­கி­ய­மா­னது. மீண்­டும் வியா­பா­ரம் தொடங்­கி­விட்­டது என்­ப­தை­யும் சிங்­கப்­பூ­ரின் விமா­னப் போக்­கு­வ­ரத்து மையத்தை ஒன்­றாக மேம்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரர்­கள் திரண்டு வர­லாம் என்­ப­தை­யும் வேலைச் சந்தை உணர்த்­து­கிறது," என்று குறிப்­பிட்­டார் அவர்.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாடு, கண்­காட்சி மையத்­தில் நடை­பெ­றும் இந்த வேலைச் சந்தை இன்­றோடு முடி­வ­டை­கிறது.